உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் பொருள்

25

குழந்தை அள்ளி வாயிலும், வயிற்றிலும் வழிய உண்ணும் கூழ் எப்படி இனிக்கிறதாம்!

66

‘அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்

என்கிறாரே!

தொல்காப்பிய வண்ணங்கள் பலவும் திருக்குறளாம் அறநூலிலே அமர்ந்து கிடத்தல் அறிதோறும் இன்பம் பயப்பதாம். இங்குக் காட்டப் பட்டவை “பானை சோற்றுக்கு ஓரவிழ்ப் பதம் என்பது போல்வது.

7. “கொல்லே ஐயம்

இத்தலைப்பே ஒரு நூற்பா: தொல்காப்பிய இடையியலில் உள்ளது (20). இதற்கு உரையாசிரியர் இளம்பூரணர் “இது குற்றி கொல்லோ, மகன் கொல்லோ; நாய் கொல்லோ; நரிகொல்லோ எனவரும்” என்றார். “அது கொல் தோழி காம நோயே" என்ற வழி ஐயங்காட்டிற்று என்றார் தெய்வச் சிலையார். சேனா வரையர் இளம் பூரணரின் முற்பாதியை மொழிந்து நின்றார்.

கொல் என்னும் இடைச்சொல் ஐயப்பொருளில் வரும் என்பதை வழக்கொடு படுத்தி வள்ளுவர் உரைக்குமாற்றை ஓர் எடுத்துக் காட்டால் கூறும் குறிப்பே இஃதாம்.

-

நகரொன்றில் வாழும் நண்பர் ஒருவரைக் காணச் செல்கிறார் அவர் நண்பர் ஒருவர். நண்பர் வீடு ஒன்றே ஒன்றாக இருந்த நாளில் வந்து பார்த்தவர் அவர். அவ்வீட்டு அமைப்பு வண்ணம் - சூழல் எல்லாமும் அப்படியே அமைந்த மூன்று டுகள் வரிசையாக இருக்கக் காண்கிறார். இதில் நண்பர் வீடு எது எனத் திகைப்பின்றி அவரால் அறிய முடியுமா? அறிய என்ன செய்கிறார்?

திகைப்படைந்து “எந்தவீடு” என ஐயுற்ற அவர், முதல் வீட்டைப் பார்க்கிறார்; தம் நண்பர் பெயர்ப் பலகையோ, அவரோ, அவர் துணையோ, மக்களோ தென்படுகின்றனரா எனப் பார்க்கிறார். அவர் நிற்கிறார், திகைக்கிறார்; கூர்ந்து நோக்குகிறார்; வந்த விரைவு இல்லை; ஓட்டம் இல்லை; அசை நடையும்கூட இசைந்தே செல்கின்றது. முதல் வீட்டில் தம் நண்பர் உடை மைச் சான்று காண வாய்க்கவில்லை. எனின், அவ்வீட்டைப் போலவே அடுத்த வீட்டையும் நின்று நோக்கு