உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

இளங்குமரனார் தமிழ் வளம் – 16

ம்

ஏன்? இடையொற்று ஆறு இடம் பெறவும் மெல்லொற்று நான்கு இடம் பெறவும் பத்து ஒற்றுக்குள் ஒன்று தானும் இ டம் பெறாமல் வல்லொற்று ஒதுக்கப் பட்டதேன்?

இதே ‘ஏன்?' என்பதை அடுத்த பாடலிலேயும் பார்க்கலாம்! “நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு

தானைக்கன் டன்ன துடைத்து

‘நோக்கு’ ‘நோக்கு' ‘நோக்கு தாக்கு' என வந்து ‘உடைத்து' நொறுக்குகிறதே; ஏன்? ஒரே ஒரு வல்லின ஒற்றும் வாராதது முதற்பாட்டு. அடுத்த பாடலிலேயே இத்தனை வல்லின ஒற்றுகள் ஏன்?

களங்கண்ட காளை போல் வானும் நோக்கின் தாக்குக்கு ஆற்ற மாட்டாமல் உடைந்து போகும் நிலையில் அல்லவோ நிற்கின்றான். வல்லினம் வராமல், தாக்குறல் வன்மையைக் காட்டுவது எப்படி? மொழியியல் பயிற்சியால் மட்டுமா இப்படிப் பாட முடியும்? உயிரியல் - உளவியல் - உணர்வியல் - காதலியல் எல்லாமும் தெளிந்தவர்க்கு அல்லவா இப்படி, இடத் திற்குத் தக நடை நலம் வந்து கைகட்டி நின்று ஏவல் செய்யும்?

66

சிறந்ததைச் சொல்ல வேண்டுமா? இசை நலங் கலந்த சொல்லால் சொல்லுக” என்பது நூலோர் முறை. "இழுமென் மொழியால் விழுமியது பயிலல்” என்பது தொல்காப்பியம். திருவள்ளுவர் விழுமியற்றுள் விழுமியதாக மக்கட்பேற்றைக் கருதினார். “பெறுமவற்றுள் யாமறிவதில்லை அறிவறிந்த மக்கட் பேறல்ல பிற" என்றார். அம் மக்கள் கூறும் இளஞ் சொல்லை - மழலையை - எவ்வளவு இழுமென் மொழியால் கூறுகிறார் என்பது அறியாததா?

“குழலினிது யாழினிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்”

என்பதில் எத்தனை இனிய ஒலிநயம்! இழுமென் மொழியால் சிறந்தது மொழிதற்குப் பயன்படுவதால்தான் ‘ழகரம்' சிறப்பு ‘ழ’கரம் எனப்படுகின்றதோ? இதோ, இளங்கோவடிகள் குறளை வாங்கிக்கொண்டு வளர்கிறாரே:

66

‘குழலும் யாழும் அமிழ்தும் குழைத்த

மழலை.

என்கிறாரே!

க்