உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

தமிழ் வளம் - பொருள்

'இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த

வகுத்தலும் வல்ல தரசு.

என்கிறார்.

99

23

நாட்டின் பொருளியல், நலவியல், வாழ்வியல் பற்றிய தகவான விதிமுறைகளை இயற்றுதல், அம்முறைப் படியே வேண்டும் பொருட் கூறுகளைத் தொகுத்தல், அவற்றைச் சிதைவின்றிப் பாதுகாத்தல், தக்காங்கு துறைவாரியாய்ப் பகுத்தளித்தல் என்னும் நாற்கூற்று நடைமுறைகளில் தலைப்பட்ட ‘இயற்றுதல்’ அன்றோ பின்வரும் மூன்றுக்கும் வழி செய்வது!

இந்நாள் நிகழும் சட்டமன்ற நடைமுறை என்ன? மக்களாட்சி என ஆட்சிமுறை மாறுபடினும் அடிப்படை முறை மாறிற்றில்லையே! பொருளியல் திட்ட வைப்பின் பின்னர்த் தானே மற்றை நடைமுறைகள் எல்லாம் இயல்கின்றன. ஆதலால், பொருள் வளம் பெருக்கும் வகைகளை இயற்றி, எவர்க்கும் இரந்து வாழும் இரங்கத்தக்க நிலை இல்லை என்பதை ஆக்காத அரசு அழிந்தொழிக என எக்காலத்திற்கும் தக வள்ளுவர் மொழிந்தார் எனலே மரபுவழிப் பொருளாம்.

6. மூவின வண்ணம்

தமிழ் மூவினப் படைப்பு தனிப் பெருஞ் சிறப்பினது. வன்மை, மென்மை, இடை மை என்றும், வல்லினம், மெல்லினம், இடையினம் என்றும் கூறப்படும். மூவினப் படைப்பு நினைதோறும் இன்பம் பயப்பதாம்! வண்ணம் பாடுதற்கு இனம் செய்யும் உதவிக்கு எல்லையொன்றில்லை என்பதைத் தமிழ் வண்ணங் கண்ட எவரும் அறிவர்!

வண்ணப் பாடல்களிலும் சந்தப் பாடல்களிலும் இன எழுத்துகள் செய்யும் பயன் பெரிதுதான்! பெரும் பாவியமோ, சிற்றிலக்கியமோ பாடும் பாவலர்க்கும் இன எழுத்துகள் இடத் திற்குத் தக இயைந்து நின்று உதவுவது சிறப்புக்குரியதுதான்! ஆனால், அறங்கூற வந்த திருவள்ளுவரையும் வண்ணப் பாவலரென வியக்க வைக்கின்றனவே மூவினங்கள்!

66

'அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை

மாதர்கொல் மாலுமென் நெஞ்சு

وو

இப்பாடலில் வல்லின ஒற்று ஒன்றுதானும் உண்டா? இல்லையே ஏன்? மெல்லின ஒற்று நான்கு இடம்பெற்றுள்ளனவே,