உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - பொருள்

33

வ்வூற்றையும் அக்கோலாகக் கொள்ளல் நூன் முறைக்குச் சாலாதாம்.

6

கல்விப் பயன் ஆற்று நீரோட்டம் அன்ன பயன் செய்வது எனவும், கேள்விப் பயன் ஊற்று நீர்ச் சுரப்பு அன்ன பயன் செய்வது எனவும் கண்டு கொள்ள இப்பொருள் உதவும் ‘கற்றிலனாயினும் கேட்க’ என்பதற்கும் பொருந்தி நிற்கும்.

10. வரலாற்றில் செய்துள்ள வன்கொடுமை

செந்தமிழில் தோன்றிய சீரிய நூல் திருக்குறள். இஃது ஆங்கிலம் முதலாய பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப் பெற்று உலகச் செல்வமாகத் திகழ்வது உலகறிந்த செய்தி. இப்பல்வேறு மொழி பெயர்ப்புக்களில் எல்லாம் நூற் பெயர், திருக்குறள்’, ‘குறள்’ என்றும் ஆசிரியர் பெயர், ‘திருவள்ளுவர்’ வள்ளுவர்' என்றுமே குறிக்கப் பெற்றுள்ளன. இதுவே முறைமை. ஆனால், ஒரு நூற்றைம்பது ஆண்டுகளின் முன்னர்ச் செய்யப் பெற்ற வடமொழி மொழி பெயர்ப்பொன்றில் திருக் குறளின் ஆசிரியர் பெயர் திருவள்ளுவராக இல்லை! அதனை இயற்றியவர் 'வல்லபாசாரியராம்! வல்லபரும் இல்லை; வல்லப ஆசாரியார்!

வள்ளுவர் எவ்வளவு எளிமையாக ‘ஆச்சாரியர்’ ஆக்கப் பெற்று விட்டார். வரலாற்றில் செய்யப் பெற்றுள்ள கொடுமைகளுக்கு இஃதோர் எடுத்துக்காட்டு!

வன்

வல்லபாசாரியரால் செய்யப் பெற்ற வடமொழி நூலின் மொழி பெயர்ப்பே திருக்குறள் என்பதற்கு வடவரா வர வேண்டும்? இங்கேயே 'ஆள்' இல்லாமல் போய் விடுமா? வறுவாயை மெல்லுபவர்க்கு இவ்வளவு கிடைத்தால் போதாதா? அல்லது தமிழகத்தில் நடக்காத - நடந்துவிடாத நிகழ்ச்சியா? தமிழர் உறக்கம் தெளியும் வரை ‘உருட்டிய மட்டும் ஊதியம்தானே!

இஃதென்ன கதையா? கற்பனையா? கயிறு திரிப்பா? எதுவும் இல்லை. இச்செய்தியைக் குறிப்பவரே ‘ஸ்ரீ வல்லபன்' என்னும் பெயரில் இருந்தே திருவள்ளுவர் என்னும் பெயர் உண்டாயிற்று என்று ‘அரிதில் ஆராய்ந்து’ அறுபது ஆண்டுகளின் முன் ‘செந்தமிழ்’ நாட்டில் உலா வர விட்ட அறிஞர் மு. இராகவ ஐயங்கார் அவர்களே. அவர் சொல்லாலேயே அறிவோம்!