உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

இளங்குமரனார் தமிழ் வளம் - 16

“தஞ்சை சரஸ்வதி பண்டாரத்தில் திருக்குறட்கு மொழி பெயர்ப்பாயமைந்த வடமொழி நூலொன்று உள்ளதெனவும், இது நூறு வருடங்களுக்கு முன்பிருந்த ஸமஸ்கிருத பண்டித ரொருவர் இயற்றிய தென்றும் இவர் குறளாசிரியரை வல்லபாசாரியர் என்ற பெயரால் வழங்கியுள்ளாரென்றும் டாக்டர் ஸ்ரீமாந் பி. எஸ். சுப்பிரமணிய சாஸ்திரிகள் என்னிடம் ஒருகால் அறிவித்த செய்தி இங்கே குறிப்பிடத் தக்கது”

L

செந்தமிழ் தொகுதி. 8 பகுதி. 11 (1909 - 1910) ஆராய்ச்சித் தொகுதி பக்கம். 209 (1938).

11. காமத்துப்பால்

காமசூத்திரத்து வழி வந்ததா?

தமிழ்நெறித் தழைப்பில் வந்த நூல் திருக்குறள். அதன் காமத்துப்பாலோ, தொல்காப்பியத்தின் இலக்கியமாக வெளி வந்தது. எனினும், 'காமசூத்திர’த்தின் வழி வந்தது ‘காமத்துப் பால்' எனப் 'புரியார்' மட்டுமல்லாமல் 'புரிந்தாரும்' வலிந் துரைத்து வருகின்றனர்.

அறத்துப்பால் ‘மநுநீதி சாத்திர' வழிப்பட்டது என்றும் பொருட்பால் ‘அர்த்தசாத்திர’ வழிப்பட்டது என்றும் கூறுபவர், ‘காமப்’ பெயரொற்றுமை கண்ட அளவில் விட்டு வைப்பரோ?

தமிழ்த் திறம் மாறாத் தகவில் அமைந்தது, திருக்குறள் காமத்துப்பால் என்பதை, அதன் அதிகாரப் பெயராலும், வைப்பு முறையாலுமே வெளிப்பட அறியலாம்.

தமிழர்க்குத் தனிச்சிறப்பாக அமைந்தது பொருளிலக் கணம். அப்பொருள், அகம், புறம் என இருபாற்படும். அவ் வகப்பொருள் முதல், கரு, உரியென முப்பகுப்புறும். அம்முப் பொருள்களுள் முதலிற் கருவும், கருவில் உரியும் உயர்ந்தவை என்பது தொல்லாசிரியர் துணிவு. அவ்வுரிப் பொருளே பொருளாக அமைந்தது திருக்குறள் காமத்துப் பால்.

புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் என்பனவும் வற்றின் நிமித்தமும் உரிபொருள்கள் என ஓர் ஒழுங்கில் வைத்தார் தொல்காப்பியர் (அகத். 14). இவ்வொழுங்கில் ஒரு சிறு மாற்றமும் செய்யாமல், அப்படியே போற்றிக் கொண்டார் திருவள்ளுவர்.