―
தமிழ் வளம் பொருள்
35
ஐந்திணை பற்றிக் கூறும் எத்தமிழ் நூலும் தொல்காப்பியர் வகுத்த உரிப்பொருள் வைப்பு முறையை அப்படியே போற்றிக் கொள்ளவில்லை என்பதை ஆய்ந்து காண்பார், வள்ளுவர் கொண்ட தொல்காப்பியக் கடைப்பிடியை வளமாக அறிவர்!
காமத்துப்பால் 25 அதிகாரங்களைக் கொண்டது. தமிழ் நெறி உரிப் பொருள்களோ ஐவகைப்பட்டவை. ஆதலின், ஓர் உரிப் பொருளையும் அதன் சார்பையும் விளக்க ஐந்ததிகாரமாய், ஐந்து உரிப் பொருள்களுக்கும் ஐந்தைந்து அதிகாரங்கள் பாடித் தமிழ் நெறியை மெய்ப்பித்தார் தவ வள்ளுவர்.
உ
1. புணர்தலாகிய உரிப்பொருளையும் அதன் சார்பையும் விளக்கும் முதல் ஐந்து அதிகாரங்கள் :
1. தகையணங்குறுத்தல் 2. குறிப்பறிதல்
2. புணர்ச்சி மகிழ்தல் 4. நலம் புனைந்துரைத்தல்
5. காதற் சிறப்புரைத்தல்.
2. பிரிதலாகிய உரிப்பொருளையும் அதன் சார்பையும் விளக்கும் இரண்டாம் ஐந்து அதிகாரங்கள் :
1. நாணுத் துறவுரைத்தல் 2. அலரறிவுறுத்தல்
3. பிரிவாற்றாமை
5. கண்விதுப்பழிதல்.
4. படர்மெலிந்திரங்கல்
3. இருத்தலாகிய உரிப்பொருளையும் அதன் சார்பையும் விளக்கும் மூன்றாம் ஐந்து அதிகாரங்கள் :
1. பசப்புறு பருவரல் 2. தனிப்படர் மிகுதி
3. நினைந்தவர் புலம்பல் 4. கனவு நிலையுரைத்தல்
5. பொழுது கண்டிரங்கல்.
4. இரங்கலாகிய உரிப்பொருளையும் அதன் சார்பையும் விளக்கும் நான்காம் ஐந்து அதிகாரங்கள் :
1. உறுப்பு நலனழிதல் 2. நெஞ்சொடு கிளத்தல்
3. நிறையழிதல்
5. குறிப்பறிவுறுத்தல்.
4. அவர்வயின் விதும்பல்.
5. ஊடலாகிய உரிப்பொருளையும் அதன் சார்பையும் விளக்கும் ஐந்தாம் ஐந்து அதிகாரங்கள்: