உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

இளங்குமரனார் தமிழ் வளம் – 16

1. புணர்ச்சி விதும்பல் 2. நெஞ்சொடு புலத்தல்

3. புலவி

5. ஊட லுவகை

4. அவர்வயின் விதும்பல்

ஒவ்வோர் ஐந்தனுள்ளும், இடை நின்றது உரிப்பொருளையும், முன்னும் பின்னும் உள்ளவை அதன் சார் நிலைகளையும் விளக்கி நிற்றல் கண்டு கொள்க.

66

இத் தமிழ் நெறியை உரையாசிரியர்கள் அறியாரோ, பதிப்பாசிரியர்கள் பாராரோ” எனின், அவர்கள் அறிந்தனர்; பார்த்தனர் என்பது மறுமொழியாம்.

1904-ஆம் ஆண்டில் தி. செல்வக் கேசவராயரால் ‘திரு வள்ளுவர்' என்னும் நூல் இயற்றப்பட்டு வெளிப்பட்டது. அந்நூலில், "காமத்துப்பால் கூறுவார் குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதம் என்னும் ஐந்தினையும் முதல் கரு உரிப் பொருள் என்ற மூன்றனுட் பெரும்பான்மையும் உரிப் பொருள்பற்றிய புணர்தலும் புணர்தல் நிமித்தமும் குறிஞ்சி எனவும், பிரிதலும் பிரிதல் நிமித்தமும் பாலை எனவும், இருத்தலும் இருத்தல் நிமித்தமும் முல்லை எனவும், இரங்கலும் இரங்கல் நிமித்தமும் நெய்தல் எனவும், ஊடலும் ஊடல் நிமித்தமும் மருதம் எனவும் ஒரே ஒரு நிலம் ஐந்து அதிகாரமாக இருபத்தைந்ததிகாரத்தாற் கூறி”னார் என்னும் அருஞ் செய்தி வந்துள்ளது. அச்செய்தி, செல்வக்கேசவர் ‘கண்டுரை’யோ எனின் ‘பண்டுரை யேயாம்' அது மணக்குடவருரை என்னும் குறிப்புள்ளது (பக். 19) ஆனால் மணக் குடவருரைப் பகுப்புகளில் இப்பகுதி காணப்படவில்லை.

இஃதிவ்வாறாக, 1912 - இல் அறிஞர் மு. இராகவரின் 'தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி' வெளிப்பட்டது. அதன் 48 - ஆம் பக்கத்தின் அடிக் குறிப்பாகக், “காமத்துப் பாலைப் பெரும்பான்மை வடநூல் வழக்குப் பற்றியும் வள்ளுவர் கூறினார் என்பதே பரிமேலழகர் கருத்து. ஆயினும், மற்றொருசார் உரையாசிரியர் தமிழ் வழக்கே பற்றி அக்காமப்பாலைக் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்ற ஐந்திணையும், முதல் கருவுரிப் பொருள்களுள் பெரும்பான்மை உரிப் பொருள்பற்றி - திணையொன்றற்கு ஐந்ததிகாரமாக இருபத்தைந்ததிகாரங்களாற் காமத்துப்பால் கூறப்பட்டது என்பதாம்" என்பது அது. இதனைக் குறிக்கும் இராகவர், “1909-ம் வருஷம் என்னாற் பதிப்பிக்கப்பட்ட திருக்குறட் பரிமேலழகருரைப் (பாக்கெட் ஸைஸ்) பதிப்பினுள் திருவள்ளுவரைப் பற்றிய குறிப்பு 16-ம்

-