உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - பொருள்

37

பக்கம் பார்க்க” என்றும் தம் முதற் பதிப்புச் செய்தியையும் ஆங்குச் சுட்டுகிறார். எனினும் செல்வக்கேசவர் போல, “மணக் குடவர்” பெயரைக் குறித்தார் அல்லர்.

இஃதிவ்வாறாக வெளி வந்துள்ள மணக்குடவர் உரைப் பதிப்புகளில் காமத்துப்பால் முகப்பில், “இதனுள் தகையணங் குறுத்தல் முதலாகப் புணர்ச்சி மகிழ்தல் ஈறாக அருமையிற் கூடலும் அதற்கு நிமித்தமும் ஆகிய அதிகாரம் மூன்றும், நலம் புனைந்துரைத்தல் முதலாகப் புணர்ச்சி விதும்பல் ஈறாகப் பிரிந்து கூடலும் அதற்கு நிமித்தமும் அதிகாரம் பதினெட்டும், நெஞ்சொடு புலத்தல் ஊடலுவகை ஈறாக ஊடிக் கூடலும் அதற்கு நிமித்தமும் ஆகிய அதிகாரம் நான்கும், ஆக பத்தைந்ததிகாரம் கூறப்பட்டது” என்னும் செய்தியே பெற்றுள்ளது.

ரு

ம்

ம்

செல்வக் கேசவர் குறிப்பிட்டுள்ளவாறு மணக்குடவர் ரைச்சுவடியில் இப்பகுதி இருந்திருக்குமாயின் இதனை ஏட்டிலிருந்து பெயர்த்து எழுதினோர்

பதிப்பித்தோர்

-

டுத்துள்ளனரோ என ஐயம் கிளைத்தல் உறுதி! ஆனால், அவ்வையம் அகற்றுதற்குரிய குறிப்பு ஒன்று 'செந்தமிழ்' முதல் தொகுதியிலே (பக். 246. ஆண்டு 1903) இடம் பெற்றுள்ளது. அச்செய்தி கொண்டே, செல்வக் கேசவரும் இக்குறிப்பை எடுத்துள்ளார் என்பதும் வெளிப்படுகின்றது:

66

இவ்வுரைப் பாயிரம் இராமநாதபுரத்தைச் சார்ந்த துன் படக்கிக் கோட்டை முத்துவயிரநாதப் புலவர் வீட்டுத் திருக் குறட் பரிமேலழகருரையேட்டினும், திருநெல்வேலி வண்ணாரப்

பேட்டைத்திருப்பாற்கடனாத கவிராயர் வீட்டுஅவ்வுரையேட்டினும் வேறாக எழுதப் பட்டிருந்தது” என்பது அக்குறிப்பாகும்.

இப்பாயிரம் பரிமேலழகர் உரை ஏட்டு படியொடு இருந்தது; ஆனால், வேறாக எழுதப்பட்டிருந்தது என்பது இக் குறிப்பால் வெளிப்படும். இரண்டு படிகளில் இவ்வொரு செய்தி ஒப்ப இருந்தமையால், ‘ஒரு சாராசிரியர் கருத்து' இஃதெனக் கட்டுரை ஆசிரியர் பெரும் பேராசிரியர் இரா. இராகவனார் குறித்தார்.

பொருட்பால் காமத்துப்பால்களின் தொடக்கத்தில் முன்னுரைப் பகுதி, மணக்குடவர் உரையில், காணப் பெறாமையால், பரிமேலழகர் உரையில் தவறாகக் கிடைத்த முன்னுரைப் பகுதியை மணக்குடவருரையெனச் செல்வக் கேசவராயர் கொண்டிருக்கக் கூடும்! அவ்வாறு கொள்ளுதற்குக் கூடாமை,