உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

இளங்குமரனார் தமிழ் வளம் – 16

கிடைத்துள்ள பொருட்பால், காமத்துப்பால் முன்னுரைகளின் அவ்வுரை உரையன்று

முரண்பாட்டாலேயே வெளிப்படுகின்றது.

என்பது

இஃதிவ்வாறாகப் பரிமேலழகர் உரைப் பாயிரத்தின் வேறாகக் கிடைத்துள்ள உரைப் பாயிரம் உள்ளங்கை ஒளி மணியாகக் காட்டுதல் உண்மையால் அஃது ஏற்றுப் போற்றத் தக்கதாகும். தமிழ் நெறியின் ‘கட்டளைக் கல்'லாகத் திகழும் காமத்துப்பால் காமசூத்திர வழிபட்டதன்று என்பதும் மெய்ம்மையாம்!

12. இயல்புடைய மூவர்

'இயல்புடைய மூவர்' எவர் எனத் திட்டப்படுத்தப் படாமலே, மனம் போன போக்கெல்லாம் உரை போன திரு விளையாடலே காட்சி வழங்குகின்றது.

“இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை

99

என்னும் குறளில் இம்மூவர் வருகின்றனர். வள்ளுவர் நாளில் 'முத்தமிழ்' 'மூவேந்தர்’ என்பன போல 'இயல்புடைய மூவரும்' தெளிவாக அறியப் பெற்றிருந்தனர். அதனால் ‘மூவர்' என்ற எண்ணடியாகச் சுட்டி அமைந்தார்.

ல்

இயல்புடைய மூவர்’ தனிச் சிறப்பை இக்குறள் எப்படி வலியுறுத்துகிறது? இல்வாழ்வான் என்பான் துணை, வாழ்வான் என்பான் நின்ற துணை, இல்வாழ்வான் என்பான் ஆற்றின் நின்ற துணை, இல்வாழ்வான் என்பான் நல்லாற்றின் நின்ற துணை, இல்வாழ்வான் என்பான் மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை, இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை என அறுமடி அழுத்தம் தரும் அடைமொழி கொண்டு வலியுறுத்துதல் அறிக.

·

பாயிர இயல் என்பதாம் நான்கு அதிகாரம் தாண்டி, நூலுள் முதல் இயல், முதல் அதிகார, முதல் குறளில் ‘இயல்புடை மூவர்' சுட்டப்பட்டுள்ளனர். அதனை அடுத்தே துறந்தாரும் துவ்வாரும் முதலாய வருபவர். அடுத்த குறளின் நிறைவிலேயே இல்வாழ்வானாய ‘தான்' வருகின்றான். இம்முறை நோக்கி இயல்புடைய மூவரைக் காணல் முறை.