உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - பொருள்

41

அமைகின்றனர். கருத்தாங்கி உருத்தாங்கி திருத்தாங்க இயல்பாக வாய்க்கின்றனர். ஆகலின் அவர் இயல்புடைய இருவராம்!

இனி, மனைவி இயல்பாய் அமைபவளோ? திருமணம் மேலுலகிலேயே உறுதிப்படுத்தப் படுகின்றது என்பது மறை மொழி. தமிழ்மொழியும், அதுவே : ஒன்றுவிக்கும் ஊழால் தலைவனும், தலைவியும் ஒன்றி உயர்ந்த பால தாணையால் தலைக்காதல் கொள்கின்றனர் ; கணவன் மனைவி ஆகின்றனர் என்பது தொல்காப்பியம் (களவு. 2) பாலாவது ஊழ்.

-

தாய், தந்தை, மனைவி என்பார் போல அன்பர் நண்பர், ஆசிரியர் மாணவர், அறிஞர் அரசர், தொண்டர் துறவர் இல்வாழியின் குடிக்கு முற்றாக உறையும் இயல்புடையரோ? விரும்பின் செறியலாம்! வெறுப்பின் பிரியலாம்! பெற்றோர் பிள்ளையுரிமை, கணவன் மனைவி, உரிமை - அத்தகையதோ? இறப்பினும் அகலா இயல் தொடர்பினர் அவரல்லரோ?

தன் வாழ்வைத் தந்தவர் தந்தவர் இருவர்; தன் வாழ்க்கைத் துணையாய் வாய்த்தவர் ஒருவர்; இம்மூவர்க்கும் செய்வன செய்து நிறைவினைப் பெறாக்கால் அவர் துணையால் இயல வேண்டிய இல்லறம் இனிது இயலுமோ? இல்லுறையும் இவர்கள் நல்லுதவியும், நல்லுரையும் இல்லாக்கால் 'இல்லறம்' சொல்லறம்' ஆவதன்றி ‘நல்லறம்’ என்னவும் படுமோ? 'நாணுத் தகவுடைத்தே காணுங்காலே' என்பதாகவன்றோ அவ்வில்வாழ்வு அமைந்து ‘பழிச்சுமை தாங்கி'யாய்ப் பளிச்சிடும்! 'இல்வாழ்வு' 'இல் இல் - வாழ்வாக’ அமைந்து விடலும் வியப்போ?

இல்வாழ்வான் தன்னைப் பேணிக் கொள்ள வேண்டும்' என்னும் வள்ளுவர், அவனை முன்னேயே பேணிக் கொள்ள வேண்டும் என்னாராய், இறுதிக்கண் வைத்தார். பண்பாளர் முறை அதுவே! ஆனால், அன்னை தந்தை ஆட்டி ஆகியவரை அப்படிக் கடைசிக்குத் தள்ளல் ஆகாது; அஃது அறமன்று என்பாராய் முன் வரிசையிலே அவர்களைப் போற்றிக் கொள்ள வைத்தார் வள்ளுவர்.

குடும்பத்தில் இருந்தே உலக நலப்பாடுகள் கொழிக்க வழிவகை கண்டவர் வள்ளுவர். ஆகலின், குடியினர்க்கு 'நல் லாற்றின் நின்ற துணை' என்றும், துறந்தார் முதலியவர்க்குத் ‘துணை’ என்றும், தென்புலத்தார் முதலியவரை ‘ஓம்பல் தலை’ என்றும் அவ்வவர் நிலை விளங்கச் சொல்லாட்சி செய்தார்.