உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

66

இளங்குமரனார் தமிழ் வளம் – 16

இயல்புடைய இருவருக்கும் பொருந்திய நீறுநல்கி”

என்பது அத்தொடர் (31). அவ்வியல்புடைய இருவர் எவர்? தாய் தந்தையராம் இருவர். இருமுது குரவராம் இவரொழிய, இன்னொருவர் வேண்டுமே!

இருமுது குரவர் ஏவலும் பிழைத்தேன்' என ஏங்கும் கோவலன், ‘சிறுமுதுக் குறைவிக்குச் சிறுமையும் செய்தேன்' என நெக்குருகுகின்றானே! அடிகள் காட்டும் காட்சியில், இயல்புடைய மூவரைச் சுட்டி வள்ளுவர் வழியில் ‘அறவோர்க் களித்தல் அந்தணர் ஓம்பல் துறவோர்க்கு எதிர்தல் விருந்தெதிர் கோடல்' என்பவற்றை இழந்தமையைக் கண்ணகி வாயிலாய்ச் சுட்டுகின்றாரே! இல்வாழ்க்கை முதல் முப்பாட்டும் ஒருப்பட்ட இடம் ஈதன்றோ! "தாய், தந்தை, மனைவி எனலுமாம்” என்றவரும் “அவர்கள் வாழ்க்கைத் துணையிலும் மக்கட் பேற்றிலும் பேசப்படுவர்” என்று தாமே மறுத்தார். மறுத்தார். "அரசன் என்றுமாம்” என்றும் உரைத்தார்.

66

ஆசான்

ஆன்றோர்

‘மூவரைத் தாய் தந்தை மனைவி என்றும், பெற்றோர் மனைவி மக்கள் என்றும் கொள்வதும் பொருத்தமாகத் தோன்றவில்லை. என்ன? பின்னே “தென்புலத்தார்..... எனவரும் குறட்பாவில் “ஒக்கல்” இருத்தலான் என்க. ஒக்கலுள் பெற்றோர் முதலியோர் அடங்குதலை ஓர்க. ஒக்கலுக்கு வேறு பொருள் காண முயல்வது வீண்" என்று இக் கருத்தாளரை மறுத்தும் பிறர் வரைந்தனர்.

ஒக்கல் என்பது உறவினர். உற்றார் வேறு! உறவு வேறு. 'உற்றார் உறவினர்’ என்னும் இணைமொழி இதனை மெய்ப்பிக்கும். தாய், தந்தை, மனைவி, மக்கள், உற்றார் ; ஏனைக் கொண்டும் கொடுத்தும் தொடர்பானவர், உறவினர் என்க.

தாய், தந்தை, மனைவி என்பாரே ‘இயல்புடைய மூவர்’ என்பது இயல்பு அடையால் விளங்கும். பிறர் பிறரெல்லாம் இயல்பொடு செறிந்தார் அல்லர். இடை இடையே தொடர்பும் விலக்கும் உடையரே!

எவ்வொருவரும், 'இவர்க்கு மகவாகப் பிறக்க வேண்டும்’ எனத் திட்டப் படுத்திக் கொண்டு, அவ்வாறு பிறப்பது இல்லை; எவ்வொருவரையும் ‘எமக்கு இவரே மகவாதல் வேண்டு'மெனப் பிறப்பிப்பதும் இல்லை! இயற்றை முறையிலேயே ‘பெற்றோர்'