உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - பொருள்

43

‘கடவுள் துணை' என்பதில் கடவுளைத் துணையாகக் கருதுதல் வெளிப்படை. ஆனால் கடவுளுக்கு நம் துணையோ எனில் இல்லையாம். அதனால் அங்குத் துணை என்பது இணை என்னும் பொருளில் நீங்கி வழிப் பொருளாக அருளின் மேல் நின்றது.

துணை என்னும் சொற்பொருளை நுண்ணிதின் நோக்கினால் வள்ளுவர் கூறும் துறந்தார் முதலிய மூவரும் உயிரோடு இருப்பவர்; துணையாய் - துணைக்குத் துணையாய் - உதவி பெறுபவராய் அமைபவர் என்பது வெளிப்படும். வெளிப்பட, 'இறந்தார்' என்பதற்கு ‘உயிர் நீத்தவர்' என்னும் பொருள் பொருந்தாமை உணரப்படும். இறந்தார்’ என்பவரும் ருப்பவரே' என்பதும் வெளிப்படும்.

‘தீரத் துறந்தார்’, ‘பற்றினைப் பற்றி விடாதவர், என்று துறவில் கூறப்படுபவரே துறந்தார்.

தமிழ் நெறியை விடுத்து அயல் நெறிக்கு ஆட்பட்டு உரை கண்டதாலேயே பரிமேலழகர், “களைகண் ஆனவரால் துறக்கப் பட்டார்” என்று உரை கூறினார். இயல்புடைய மூவர்க்குப் 'பிரமசரியன்' ‘வானப்பிரத்தன்”, “சந்நியாசன்' என்பவரைக் குறித்து விட்டமையால் ‘துறந்தார்' என்பதற்கு நேர் பொருள் காணாமல் வேறு பொருள் காட்டினார். பிறரும், 'வருணத் தினையும் நாமத்தினையும் துறந்தார், ‘மண், பெண், பொன் இந்த மூவகை ஆசையைத் துறந்தார்’ ‘கடவுளைப் பற்றி நாணினைத் துறந்தார்’ 'குடிப்பிறந்தாரால் ஓரோர் காரணத்தினால் வெகுண்டு துறக்கப்பட்டார்' எனப் பலப்பல கூறினார்.

இனித், துவ்வாதவர் என்பது சிக்கலற்றது. ‘துன்புருறூஉம் துவ்வாமை' என்பார் வள்ளுவர். துவ்வாமை உண்ணாமை; உண்ணுவற்கு வாய்ப்பு இன்மை. அஃதாவது வறுமை.

"இன்றும் வருவது கொல்லோ நெருநலும் கொன்றது போலும் நிரப்பு”

என வருந்தி வகையற்று இல்லத்தில் ஒடுங்கிக் கிடக்கும் வறியரே 'துவ்வா தவர்’ என்க.

இறந்தார் என்பதற்கு, "ஒருவருமின்றித் தன்பால் வந்து இறந்தவர்” என்று உரை கூறி, “இறந்தார்க்கு நீர்க்கடன்” முதலிய செய்து நல்லுலகின்கண் செலுத்துதலை விளக்கினார் பரி மேலழகர். அதனால் பழையவுரைகளுடன் புத்துரைகள் சிலவும்