உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

இளங்குமரனார் தமிழ் வளம் – 16

இவ்வுரையையும் விளக்கத்தையும் மேற்கொண்டு இயல்கின்றன. இறந்தார்க்கு எப்படி இருப்பவர் துணையாகக் கூடும்? இறந்தார்க்குச் செய்யும் கடன்கள் கட ன்களே’ அன்றித்

'துணை' என்பதாமோ?

அதனால், “கல்வியினால் மிக்கோர் : வறுமையைக் கடந்து மிக்க செல்வத்தை உடையார் ; குடும்பத்தை விட்டுக் கடந்தவர்; யாருமற்றவர்; தாமாக வாழ முடியாத இளையரும் முதியரும்; அளவு கடந்த வாழ்க்கை நடத்திக் கெட்டுப் போனவர்” என உயிரோடு இருப்பவர்களைச் சுட்டினர் முன்னும் பின்னும் உரை கண்டோர்கள்.

'இறந்தார்' என்பதற்குச் சொற்பொருள் காணில் தெளிவாம். இல்லிறப்பான்' (146) என்னும் சொல்லாட்சி திருக்குறளில் உள்ளது. அதன் பொருள் 'இல்லத்தைக் கடத்தல்' என்பதாம். இறத்தல் என்பதற்கு எட்டாமல் போதல், கழிதல், சாதல், நெறி கடந்து செல்லல், மிகுதல், நீங்குதல் ஆகிய பொருள்களை அகர முதலிகள் தரும். இவையெல்லாம் நீங்கல் பொருளில் வரு வனவே. வீட்டுத் தாழ்வாரத்தில் சுவரைக் கடந்த பகுதிக்கு ‘இறப்பு' (இறைவாரம், இறவாரம்) என்பது பெயராக இருத்தல் அறிக. 'ஏட்டைக் கட்டி இறவாரத்தில் வை!' என்னும் பழ மொழியும் நினைக. ஆகலின் ஊணின்றி வறியராய் வீட்டை விட்டு வெளியேறியவர் ‘இறந்தார், எனப் பெற்றனராம்.

ரு

துவ்வாதார், ஊணின்றி இல்லகத்திருக்கும் மானம் போற்றும் வறியர் என்றும், இறந்தார் இல்லகம் கடந்து ஊணுக்காகப் பிறர் உதவி நோக்கி வெளிப் பட்டவர் என்றும் பொருள் கொள்க. “இருக்கும் இடந்தேடி வந்து என்பசிக்கு

எடுத்து இடுவோர் உண்டென்றால் உண்பேன்”

என்னும் பட்டினத்தார் போலும் துறவியர் முதலாமவர்.

பொங்கிய பானையில் சோற்றுப் பொறுக்குக் காணாமல் வாய் விட்டு அழும் குழவியை அமர்த்த ‘மறப்புலி உரைத்தும், மதியம் காட்டியும்' வெதும்பி வீட்டுள் அடைந்து கிடக்கும் தாயையும், மக்களையும் உடைய கழகப் பெருஞ்சித்திரனார் அனையர் இரண்டாமவர்.

பெற்றவராலோ, பிள்ளைகளாலோ, உடன் பிறப்புகளாலோ, ஆள்வோராலோ, அயலாராலோ புறக்கணிக்கப்பட்டும், வெருட்டப்பட்டும், அலைக் கழிக்கப்பட்டும், வறுமைப்