உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

தமிழ் வளம் பொருள்

45

பட்டும், இல்லகங் கடந்து இரவா இரப்பாளராய் வருபவர் மூன்றாமவர்.

இம்மூவர் இயலும் நிலையும் சூழலும் தேவையும் வேறு வேறானவை யாகலின், தனித்தனி எண்ணினார். துறந்தார், ஊணிலா வறியர், பேணுவாரின்றி வெளிப்பட்டார் என்னும் மூவரே துறந்தார், துவ்வாதார், இறந்தார் என்க.

6

14. ஐம்புலத்தாருள் தென்புலத்தார்

தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான் என்பாரே ஐம்புலத்தார்' எனத் திருவள்ளுவரால் எண்ணப்படுகின்றார். வருள் முன்னிருவரே ஆய்வுக்குரியவர் ஆயினர். பின் மூவரும் வெளிப்படையாய் விளக்கம் பெறுகின்றனர்.

பண்டைய உரையாசிரியர் அனைவரும், பிற்றை உரை ஆசிரியருள் பலரும் தென்புலத்தாரையும் ‘பிதிரர்’, ‘தேவர்’ எனவே கொண்டனர். அவர்கள் கருத்தை ஏற்றுக் கொள்ளாமல், மறுக்கவோ, வேறு பொருள் காணவோ வேண்டியதென்ன?

வள்ளுவர் வாய்மொழி ‘பிதிரர்,தேவர்’ என்னும்பொருள்களை ஏற்கத் தடையாயுள்ளது. நூலாசிரியர் உள்ளகம் அவர்தம் சொல்லக ஊர்தியிலே உலா வருவது என்பது, உணரக் கூடியதாம்.

தென்புலத்தார், தெய்வம் என்பாரை ஓம்புதல் கூடுமா? அவ்வாறு ஓம்பும் வகை என்ன? ‘ஓம்புதல், என்பதன் பொருளை அறியின் புதுப் பொருள் காண எவரையும் தூண்டும். அப்படித் தூண்டப் பெற்றாரே, தென்புலத்தார்க்கும் தெய்வத்திற்கும் புத்துரை காணத் தலைப்பட்டுள்ளனர். அத்தலைப்பாட்டுள் ஒன்றே இக்கட்டுரையும்.

ஓம்புதல் என்பது பேணுதல், பாதுகாத்தல் என்னும் பொருள் தரும் பழஞ்சொல். 'குடிபுறங் காத்தோம்பி" (திருக்.549), ‘ஓம்பும் ஊர்' (புறம் 329) “ஓம்பினர் காப்போர்” (மலைபடு. 343) “பிழையுயிர் ஓம்புமின்” (சிலப். 30 : 195) "ஈற்றியாமை தன்பார்ப் போம்பலும்" (பொருந. 186) என்பவற்றை எண்ணினால் இப் பொருள் விளக்கம் ஆகும். பிதிரரையும், தேவரையும் இப்படி ஓம்பக் கூடுமா?

ஒப்புடன் முகமலர்ந்து வரவேற்று ஓம்புவது விருந்து, ஊணும், நீரும், உடையும், மருந்தும், பிறவும் தந்து பேணுவது