உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

இளங்குமரனார் தமிழ் வளம் – 16

விருந்து! அதுவே விருந்தோம்பல். 'விருந்தோம்பல்' சிறப்பை விளம்பவேண்டுமா? ‘விருந்து' தானே, ஊடல் போக்கிக் கூடல் அருளும் கொடைப் பொருள்.

பகைவர் ஆவே ஆயினும் அதற்கு நலிவும் நைவும் இன்றிப்புல் கண்ட இடத்து மேயவிட்டு, நீர் கண்ட இடத்துக் குடிக்க விட்டு, நிழல் கண்ட இடத்துப் படுக்க விட்டு, வெருட்டாமல் ஓட்டாமல் காலார நடக்க விட்டுக் கொண்டு வரும் வெட்சி மறவர் வினை, ஆதந்தோம்பல்' எனப் புறத்துறையில் அறத்துறையாய்த் திகழ்வதை இலக்கணர் எவரே அறியார்?

ஊரும் உற்றாரும் உறவும் உழுவலன்பும் ஒருங்கே விடுத்துத் தலைவனே தஞ்சமாய்ச் செல்லும் நெஞ்சமர் தலைவியைத், தலைவன் கையடையாய்த் தோழி அருளிக் கரைந்துருகும் காதற் கிளவிவே "ஓம்படைக் கிளவி” என்பதைப் புதுவழக்கெனப் புகலக் கூடுமோ? (தொல். 581, 1060).

"ஓம்பினேன் கூட்டை வாளா” என இரங்குகிறாரே நாவரசர்; "ஓம்பாது ஓம்பாது உண்டு கூம்பாது உண்டு கூம்பாது வீசிய" புகழைப் பேசுகின்றதே புறப்பாடல்; ஓம்புதலும், பரிந்தொம்பல்’ வேண்டுமென மொழிகின்றாரே வள்ளுவர்; "விருந்தோம்பல் ஓம்பா மடமை" என்கிறாரே அவர்! “ஓம்பின், அமைந்தார் பிரி வோம்பல்” என்கிறாரே வள்ளுவ வாய் மொழித் தலைவி!

உடலை, உயிரை, ஊரை, நாட்டை ஓம்பல் அன்றிப் பிதிரரையும் தேவரையும் ஓம்பக் கூடுமோ? அவரை நினைத்துப் போற்றலாம்; படையலிடலாம்; வாழ்த்தலாம்; வணங்கலாம்; பரவலாம்; பரிந்து உருகலாம்; அவரை ஓம்பக் கூடுமோ? ஆகலின் ஓம்புதற்குரிய தென்புலத்தாரும், தெய்வமும், விருந்தினர் போலவும் ஒக்கல் போலவும், தன்னைப் போலவும் உயிரோடு உறைந்து உலகிடை உலவி வாழ்பவரே எனக் கொள்ளுதல் தகவாம். அவருள் தென்புலத்தார் எவர்?

'பிதிரர் அல்லர்' என்பதை ஓம்புதல் சொல்லால் விளக்கினோம் எனின், பின்னும் அவ்வள்ளுவச் சொல்வழியாகத் தானே புதுப்பொருள் காணவேண்டும்? அதற்கு உதவும் சொல் எது? உதவும் சொல் ‘தென்புலத்தார்' என்னும் சொல்லே!

தென் என்பதன் பொருள் என்ன, அழகு; இனிமை; தெற்கு; தென்னுதல்; தேன்; வண்டு என்பன பொருள். இவற்றைத் தழுவிய பொருளும் உள.