உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - பொருள்

47

புலம் என்பதன் பொருள் என்ன? அறிவு, குடியிருப்பு, சுவை, ஒளி முதலிய ஐம்புலம்; திசை, புன்செய், நிலம், வயல், நூல், நூலறிவு என்பன பொருள். இவற்றைத் தழுவி வரும் பொருள் களும் உள.

'புலந்தொகுத்தது' தொல்காப்பியம். “புலனன் குணர்ந்த புலமையோரைச்”சுட்டுவதும் அது வனப்புகளுள் (நூல் வடிவுகளுள்) ஒன்று. புலன்; புலப்படுகின்றது புலப்படவில்லை என்பவை அறிவு, அறியாமைகளை விளக்கும் வழக்குச் சொற்கள். புலத்துறை முற்றிய கூடலூர்கிழார் ஐங்குறு நூற்றைத் தொகுத்துத் தமிழ்ப் பாவையாகத் தந்த புலமைச் செல்வர்.

ழப்'

அறிவின் எல்லை ‘புலவரை' எனப்படும். ‘புலவரை அறியாப் புகழைப் புகலும்' பரிபாடல். “புலவரை இறந்த புகழைப் போற்றும் புறநானூறு!

உவகை தரும் நிலைக்களங்கள் நான்கனுள் அறிவும் ஒன்று என்பது தொல்காப்பியம்.

“செல்வம் புலனே புணர்வு விளையாட்டென் றல்லல் நீத்த உவகை நான்கே”

என்பது அது.

L

புகை புகா இடத்தும் புகுந்து பகைத்திறம் காண வல்லான் ‘புலனறி சிறப்புக்கு’ உரிமை பூண்டவன் என்பது புறப்பொருள் இலக்கணம்.

புலன்களின் வழியாக அமைவதுதானே புலம், புலப்பாடு, புலமை, புலவன் என்பன.

புலவர்களோடு கூடி மகிழும் இன்பத்தை வீட்டுலகுக்கு மேம்பட்டதாகக் கூறுவது ஒரு ஒரு நூல்; "புலவர்ப் பாடும் புகழுடையோர் விசும்பின் வலவன் ஏவா வான ஊர்தியும்" பெறுவர் என்பது ஒரு நூல். “புலவர் பாடும் புகழை இழப்பதைப் பேரிழி” வாகக் கூறுவது ஒரு நூல். “உவப்பத் தலைக் கூடி உள்ளப் பிரிதலைப் புலவர் தொழிலாகக்” கூறுவது திருக்குறள்! இவற்றால் ‘தென்புலத்தார்' என்பதன் பொருள் புலப்படுமே! இனிய அறிவாளர், தேர்ந்த அறிவாளர் என்பதே பொருள். பழநாளே புலமையை மதித்துப் போற்றியது தமிழ் மண்! அதற்கெனவே, முருகாற்றுப்படை, கூத்தராற்றுப்படை முதலியவைகளைக் கண்டது தமிழ் மண்! புலவர்க்கு அரசு