உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

இளங்குமரனார் தமிழ் வளம் 16

கட்டிலையும் அமைச்சுக்கட்டிலையும் வழங்கிய அருமை உடையது இந்த மண்! நாட்டு வேந்தனாகத் திகழ்ந்தவனே பாட்டு வேந்தனாகவும் திகழ்ந்தது இத் திருமண்! ஆதலால் வழிவழி, புலமையைப் போற்றுதல் வீட்டுக் கடமையும் நாட்டுக் கடமையுமாகத் திகழ வேண்டும் என்று கருதிய, 'அவரே புலவர்’ எனப்பட்ட திருவள்ளுவர் தென்புலத்தாரைச் சுட்டினார்.

பாட்டுப் பாடுபவர் தாம் புலவரா? எத்துறையில் திறம் பெற்றவரும் புலவரே, புலமையரே! அவரைப் போற்றி, அவர்க்கு வேண்டும் உதவிகளைச் செய்யாமையால் இந்நாட்டின் புலமைச் வெளிநாட்டுச் செல்வங்களாகிக்

செல்வங்களெல்லாம் கொண்டு வருதல் கண்காணத் தோன்றவில்லையா? அறிவுச் செல்வர்கள், ஆராய்ச்சி வல்லார்கள், புதியன புனைவாளர்கள் - வேடந்தாங்கலுக்குப் பறவைகள் படையெடுப்புப் போல் வெளிநாடுகளைத் தேடிச் செல்லவில்லையா?

-

அறிவுச் செல்வர்களைப் போற்றி அவர்க்கு வேண்டும் வாய்ப்புகளைச் செய்ய வகையற்று ஒடுக்குகின்ற அல்லது வெளியே ஓட்டுகின்ற - இந்நாட்டுக் கொடுமையை உணர வல்லார், அறிவுச் செல்வரை வீடும், ஊரும், நாடும் போற்ற வேண்டிய கட்டாயத்தை உணர்வர்!

தம்மைப் பற்றியும் தம் குடும்பத்தைப் பற்றியும் எண்ணாது ‘என் கடன் பணி செய்து கிடப்பதே' எனத் தொண்டிலே ஊன்றியவர் தென் புலத்தார். அவர் தேடி வாராது, உதவி தேடி, ஓடிவர வேண்டும்! அக்குறிப்பே வள்ளுவர் குறிப்பு.

நாட்டுத் தொண்டுக்கே தம்மை முழுதுற ஒப்படைத்த முழுதுறும் அறிஞர் வ. உ. சி. அன்றே சொன்னார் ; எழுதினார். "தென்புலத்தார் ; தென் - அழகிய; - அறிவு,

அழகிய அறிவானது மெய்யறிவு”

தமிழ்த் தென்றல் திரு. வி. க. எழுதினார் :

தென்புலத்தார் : குருமார்.

வள்ளுவர் காப்பியம் பாடிய பெருமகனார் பாடினார் :

-

66

வானறிவர், வன்புலத்தை வென்றோர், மனம் நிறை

காட்சியர், தென்புலத்தார்”

"தென்புலத்தார் என்பவர் தேர்ந்து பலகலையும்

நன்புலத்தில் நன்காய்ந்த நற்கலைஞர்”