உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

தமிழ் வளம் பொருள்

‘தன்னொழுக்கும் தாய்மையும் சார்ந்தோர்க் கினிமையும்

துன்னும் அகம்புறம் தூய்மையும் - மின்னிய தென்புலத்தார்”

49

தென்படுதல் என்பது தோன்றுதல், வெளிப்படுதல் என்னும், வழக்கில் உண்மை இன்றும் அழிந்து படவில்லையே!

-

தென்புலத்தார், - இனிய -சீரிய அறிவாளர், புலமையாளர் குருவர் என்றால் அவரைப் போற்றுவது எப்படி?

ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்னேயும் திகழ்ந்த குருகுலக் கல்வி முறையை இக்கால முதியவர்கள் நன்கு அறிவரே! அக் குருவர்க்குச் சம்பளம் எவர் தந்தார்? ஊர் மக்களுக்குக் கற்பித்தவரை, ஊரே காத்தது! வீட்டுப் பிள்ளைகளுக்குக் கல்வி தந்தவரை வீடே, வீட்டில் ஒருவராகக் கொண்டு புரந்தது! அரிசி, பருப்பு, காய்கறி, விறகு என வேண்டும் பொருள்களை விரும்பித் தந்தது! ஊருக்குத் தொண்டர் ர் ஆசிரியர். அவ்வாசிரியர்க்கு ஊரே தொண்டு பூண்டது. கணக்காயர் இல்லாத ஊரும், பிணக்கறுக்கும் மூத்தோரை இல்லாத அவையும், பகுத்துண்ணும் தன்மை ல்லார் அயலிருப்பும் நன்மை பயவா” எனத் திரிகடுகம் பேசிற்று. இன்று கற்பிப்பார் நிலைமாறிற்று! கவனிப்பார் நிலையும் மாறிற்று.

66

‘அறிஞரைப் போற்றி அவர் வழியில் நில்லாத - செல்லாத வீடும், நாடும் உய்யா! ஆதலால், புலமையரைப் போற்றுக! புலமையரைப் பேணுக! அப்பேணுதலைத் தலைக் கடமையாகக் கொள்க!" என்னும் குறிப்பினதே “தென் புலத்தார்... ஓம்பல் தலை” என்பதாம்.

15. தென்புலத்தார்

திருக்குறள் இல்வாழ்க்கை மூன்றாங் குறளில் முற்படச் சுட்டப்படுபவர். “தென்புலத்தார்" என்பவர் ஆவர்.

தென்புலத்தார் என்பதற்கு ஆசிரியர் பரிமேலழகர், “பிதிரர்” எனப் பொருளுரைத்து, “பிதிரராவார் படைப்புக் காலத்து அயனாற் படைக்கப்பட்ட கடவுட்சாதி; அவர்க்கிடம் தென்திசையாதலின் தென்புலத்தார் என்றார்” என்று விரித்

துரைத்தார்.

இரண்டாம் குறளில் வரும் “இறந்தார்” என்பதற்கு, “ஒரு வருமின்றித் தன்பால் வந்து இறந்தார்க்கும்” என்று பொருள்