50
கூ
66
இளங்குமரனார் தமிழ் வளம் – 16
கூறி இறந்தார்க்கு நீர்க் கடன் முதலிய செய்து நல்லுலகிற் செலுத்துதல்” என விரித்தமையால், இவண் அதனைக் கூறாமலும், தென்புலத்தாரை ஓம்புவதைக் காட்டாமலும் அமைந்தார். தென்புலத்தார் என்பவர் ‘பிதிரர்’ தாமா?
தென்புலத்தார் பிதிரரே என்பதற்கும், அவர்க்குக் கடனிறுத்தல் புதல்வர் கடன் என்பதற்கும், புறநானூற்றுப் பாடல் ஒன்று சான்றாகக் காட்டப்பட்டு வருகின்றது. முதற் கண், அப்பாடல் பொருள் அதுதானா என்பதைக் கண்டறிதல் இவ்வாய்வுக்கு வேண்டத் தக்கதாம்.
"ஆவும் 'ஆனியற் பார்ப்பன மாக்களும் பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித் தென்புல வாழ்நர்க் கருங்கடன் இறுக்கும் பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும் எம்மம்பு கடிவிடுதும் நும்மரண் சேர்மின்என அறத்தாறு நுவலும் பூட்கை”
என்பது மேற்காட்டிய புறப்பாட்டு
1.
அ
(9).
("ஆவும் ஆனியல்" என்னும் தொடர், ஆவும் ஆவியல் என்றோ, ஆனும் ஆனியல் என்றோ ஓரொழுங்கில் இருந் திருத்தல் வேண்டும்.
ஆவும், மாவும், கோவும் (ஆ -உம்; மா -உம்; கோ - உம்) என்று வருவது போல் 'ன்' பெற்று ஆனும், மானும், கோனும் என்றும் வரும்.
66
ஆமாகோ னவ் வணையவும் பெறுமே” என்பது நன்னூல். ஓரொழுங்கின்மை ஏடு பெயர்த்தோரால் நிகழ்ந்திருத்தல் வேண்டும். அதுவும் உரையாசிரியர் காலத்திற்கு முற்படவே நிகழ்ந்திருத்தல் வேண்டும் என்பது; “ஆவும் ஆவினதியல் பையுடைய” எனவரும் அவருரையால் தெளிவுறும்.)
இதற்குப் பழைய உரைகாரர், "ஆவும் ஆவினதியல்பை உடை ய பார்ப்பனரும் மகளிரும் நோயுடையீரும் பாதுகாத்துத் தென்றிசைக் கண் வாழ்வோராகிய நுங்குடியில் இறந்தோர்க்குச் செய்தற்கரிய பிண்டோதகக் கிரியையைப் பண்ணும் பொன் போலும் பிள்ளைகளைப் பெறாதீரும். எம்முடைய அம்பை பெறாதீரும்.எம்முடைய விரையச் செலுத்தக் கடவேம். நீர் நுமக்கு அரணாகிய இடத்தை அடையும் என்று அறநெறியைச் சொல்லும் மேற்கோள் என்றார்.