உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - பொருள்

'தென்புல வாழ்நர்' இறந்தோர் தாமா?

‘புதல்வர் கடன்' பிண்டோதகக் கிரியைதானா?

51

வடபுலம்' என்பது வடநாடு என்றும், ‘தென்புலம்’ என்பது தென்னாடு என்றும் பயில வழங்கும் வழக்கு பாட்டு தொகை பெரும் பாவியம் ஆகியவற்றில் உண்டே!

தென்புலங் காவலர் மருமான், குணபுலங் காவலர் மருமான், குடபுலங் காவலர் மருமான்” எனச் சிறுபாணாற்றுப் படை முறையே பாண்டியனையும் சோழனையும், சேரனையும் வெளிப்படச் சுட்டுகின்றதே!

'தென்புல வாழ்நர்' எனத் தொடர் இருந்தும், இறந்தார் மேல் ஏற்றி வைத்தல் ஏற்கத் தக்கதா?

‘அருங்கடன்' என்றால் சோற்று நீர்க்கடனை அன்றி வேற்றுக் கடனொன்றும் இல்லையா?

கடன் இறுக்கும்' என்பது எத்தகைய அரிய ஆட்சி! அரசிறை: இறை இறுத்தல் இவையெல்லாம் அரசுக்கும், நாட்டுக்கும் செய்யும் கட்டாயக் கடன்கள் அல்லவோ?

கட்டாயம் என்பதே ‘கட்டு ஆயம்' (அரசிறை) என்னும் சொல் வழியாகத் ‘தீராக் கடமை' என்பதை வலியுறுத்துவதே யன்றோ?

“ஈன்று புறந்தருதல் என்றலைக் கடனே சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே

ஒளிறுவாள் அருஞ்சமம் முறுக்கிக்

களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே'

என்னும் பொன்முடியார் பாட்டு (புறம். 312), என்ன கடனைப் புதல்வர்க்கு அறுதியிட்டு உரைக்கின்றது?

இவற்றையெல்லாம் எண்ண வேண்டாவா?

இனித், “தென் புலவாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்’’ என்பதற்குத் “தென்னாட்டு வாழ்பவர்க்கு அரிய கடமையினைச் செலுத்தும்” என ஒரு நாட்டை மட்டும் சுட்டலாமோ எனின், இப்பாட்டுடைப் பெருவேந்தன், பாண்டியன் முதுகுடுமிப்