உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

இளங்குமரனார் தமிழ் வளம் – 16

பெருவழுதி என்பதை அறியின், அவன் நாட்டு வாழ்நர்க்கு ஆற்றும் கடனைச் செய்தற்காம் மக்கள் என்பது தகவேயன்றோ! ஒருவர் வாழ்நாள் முடியும்முன் வழிவழிக் கடமையை மன்பதைக்கு ஆற்றுமாறு, மக்கட்பேறு பெறுதல் வேண்டும் என்பது தண்டமிழ் நாட்டுத் தலை வழக்காக இருந்ததால் அல்லவோ, “வீறுசால், புதல்வற் பெற்றனை இவணர்க்கு” எனப் பதிற்றுப் பத்துப் பாடுகின்றது! 'இவணர்' என்பார் 'இவ்விடத்து வாழ்வார்' அல்லரோ!

இக்கொள்கை ஊற்றத்தால் அல்லவோ, வடக்கிருந்த கோப்பெருஞ் சோழன் தன்னொடும் வடக்கிருக்க வந்த புலவர் பொத்தியாரை நோக்கிப்,

“புகழ்சால் புதல்வன் பிறந்தபின் வா

எனக் கட்டளையிட்டு நெட்டுயிர்த்தேக வைத்தான்!

ஆகலின், புறப்பாடல் காட்டும், 'தென்புல வாழ்நர்' பிதிரர் அல்லர்; தென்னாட்டாரே என்றும், ‘அருங்கடன் இறுத்தல்' சோற்றுநீர்க் கடனன்று; நாட்டுக்குக் கடனே என்றும், கொள்ளத் தக்கனவாம். இப்பொருளே, வழக்கொடு வாய்ந்து வழிவழிச் சிறக்கத் தக்கவையாம்!

6

66

இனி,

வணங்கிய சாயல் வணங்கா ஆண்மை

இளந்துணைப் புதல்வரின் முதியர்ப் பேணித் தொல்கடன் இறுத்த, வெல்போர்

எனவரும் பதிற்றுப் பத்து, மயக்கமற இருந்தும், அதன் குறிப்புரையோ இல்லா மயக்கத்தை வல்லாங்கு ஊட்டுவதாய் அமைந்து விட்டது. "பெரியோரிடத்தே வணங்கிய மென்மையும் பகைவர்க்கு வணங்காத ஆண்மையையும் உடைய இளந் துணையாகிய புதல்வர்களைப் பெற்றமையால் நின்குலத்து முன்னோர்களான பிதிரர்களைக் காப்பாற்றி இல்லறத் தார்க்குரிய பழைய கடன்களைச் செய்து முடித்த வெல்லும் போரைச் செய்யும் தலைவனே" என்பது அது (பதிற். 70).

பெற்றோரைப் பேணுதல், பிறந்தோர் பிறவிக் கடன் ஆதலின், தந்தை தாய்ப் பேண் என்பது குழந்தைக் கல்வி ஆயிற்று! முதுமைச் செல்வத்தைப் போற்றுதல் வழிவழி முறையாக நிகழ்ந்து வருதலில் 'முதியர்ப் பேணிய' என்பது