உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

தமிழ் வளம் பொருள்

53

வழக்காறாகத் திகழ்ந்தது. வாழ்வைத் தந்த பெருமக்களுக்கு வாழ்நாளெல்லாம் கடமை யாற்றினாலும் ஈடாகாது என்பது வெளிப்படையாக இருக்கவும், அவர் தம் முதுமையிலேனும் பேணிக் காத்தல் கட்டாயம் ஆகலின் அது ‘தொல்கடன் இறுத்தல்' எனப்பட்டதாம். இருக்கும் முதியரை விடுத்துப் போற்றுதல் இவண் கூறப் பெற்றதில்லை என்க. ஆதலான் பதிற்றுப் பத்திற்குப் புத்துரை கண்ட உரை வேந்தர் ஒளவை அவர்கள், ளந்துணைப் புதல்வரின் முதியர்ப் பேணி' என்பதற்கு, இளந்துணையாகிய மக்களைக் கொண்டு முதியவராகிய பெரியோர்க்குரிய தொண்டினைச் செய்வித்து’

என உரைவரைந்தார்.

மேலும், மகப்பேற்றினால் பிதிரர் கடன் கழியும் என்னும் வடவர் கொள்கை தமிழ்நாட்டார்க்கு இல்லை. திருவள்ளுவர், 'மகப்பேறு பிதிர்க்கடனிறுக்கும் வாயிலெனக் கூறாமையே இதற்குச் சான்ற கரியாம்’. என்று தமிழியல் விளக்கமும் அவர் வரைந்தமை பேணிக் கொள்ளத் தக்கதாம்.

இனிக், குறள் கூறும், ‘தென்புலத்தார்' தென்னாட்டார் தாமா? உலகுக்கு ஒரு நூல் செய்த பொது மறைப்பொய்யா மொழியார், தென்னாட்டாரைப் போற்றுதலைத் தனியே சுட்டுவாரா, ஆழிப் பெருக்காம் ஊழிக் கொடுமைக்கு ஆட்பட்டு, ஒரு காலத்தில் கடல் ல் கொண்ட தென்னாட்டில் இருந்து வாழ்வு தேடி வந்தவரே இத் 'தென் புலத்தார்' என்று புத்துரை காண்பவர் கருத்து ஏற்குமா? எக்காலத்துக்கும் ஒத்த பொருளைக் கூற வந்த திருவள்ளுவர், ஒரு காலத்து ஒரு நிகழ்ச்சிக்கு ஆட்பட்டவரை காட்டினார் என்பது, வள்ளுவ வாய்மையர் வழியாகாதே!

வள்ளுவர் கூறும் தெய்வத்தை அடுத்துக் காணலாம்.

16. ஐம்புலத்தாருள் தெய்வம்

தென்புலத்தார் என்பவரை அடுத்து நிற்பவர் 'தெய்வம்’ ஆவர். தெய்வமாவார், தென்புலத்தார் விருந்து ஒக்கல் தான் என்பார் போல, உலகில் வாழுகின்றவரேயாவர். இல்லையேல் அவரை ஓம்புதல் எவ்வாறு?

தெய்வம் பராவுதல், தெய்வம் வழிபடுதல், தெய்வம் வாழ்த்துதல், தெய்வத்திற்குப் படையலிடல், தெய்வம் ஏத்துதல், தெய்வம் தெளிதல் என வழக்குண்மையன்றித், 'தெய்வம் ஓம்புதல்' என வழக்கு இல்லையே! ஆதலால் ‘தேவர்' எனப்