உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

இளங்குமரனார் தமிழ் வளம் – 16

பொருள் தருவது ல்லை இத் 'தெய்வம்' என்னும் சொல் என்பது விளங்கும்.

கடவுள்' என்பதற்குக் கடவுட் பொருளேயன்றி முனிவர், துறவோர் என்னும் பொருளுண்மை இலக்கியம் கண்டோர் அறிவர்; 'தெய்வம்' என்பதற்கும் முனிவர், துறவோர் என்னும் பொருளுண்மையும் அவ்வாறே அறிவர். இப்பொருள் குறித்து அறிஞர் மயிலை சீனி. வேங்கட சாமியார் ஒரு கட்டுரையே வரைந்தார். அதில், திருவள்ளுவர் ‘தென்புலத்தார் தெய்வம்’ என எண்ணியவற்றுள் தெய்வம் என்பது துறவியரைக் குறிக்குமெனச் சுட்டி விளக்குகின்றார் (அஞ்சிறைத்தும்பி; கடவுள்) ஆனால் இல்லறத்தான் ஓம்ப வேண்டியவர்களை எண்ணும் திருவள்ளுவர். துறந்தார் துவ்வாதவர்” என வெளிப்ப என வெளிப்படச் சொல்லி விடுவதால், இத்தெய்வம்' என்பவர் துறவியர் அல்லர்; வேறொருவர் எனக் கொள்ள வேண்டும் என்க!

66

அருமையும் மெருமையும் ஆர்வமும் உடையவர்களைத் தெய்வமாகக் கூறுதல் இருவகை வழக்குகளிலும் உண்டு “தெய்வத்தைக் கண்டது போல்” “தெய்வமே கொடுத்தது போல' என உவமை கூறுவதும் வழக்கே. திருவள்ளுவரும், வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவரையும், ஐயப்படாது அகத்தது உணர்வாரையும் தெய்வத்தோடு ஒப்பக் கூறுவார். முயற்சியாளனுக்குத் தெய்வம் மடிதற்று முந்து உதவுதலையும் குறிப்பார். இங்கெல்லாம் தெய்வம் ‘தெய்வப் பொருளே' தருவன.

தெய்வத் தன்மை உடையாரைத் தெய்வமாகக் கொள்ளுதல் பழவழக்கே. 'தெய்வப் புலவர் திருவள்ளுவர்’ ‘தெய்வ அகத்தியன்’ என்னும் வழக்குகளைக் கருதுக.

66

கற்புக்கடம் பூண்ட இத்தெய்வம் அல்லது பொற்புடைத் தெய்வம்யாம் கண்டிலமால்

99

எனக் கண்ணகியாரைச் சுட்டும் கௌந்தியடிகள் வாக்கால் (சிலம்பு - 15: 143-4) 'வாழ்வாங்கு வாழ்பவர் தெய்வமே' எனப் பெறுதல் விளக்கமாம். இதுகாறும் சுட்டியவை மேம்பட்டாரைத் தெய்வமென மேலோர் கொள்ளுதலை விளக்குவன.

இனி, இவ்வாழ்வான் ஓம்ப வேண்டிய ‘தெய்வமாவார் எவர்' என்பதைக் காணலாம்.

66

சிலம்பின் வேட்டுவவரி காட்டும் 'சாலினி' என்பாள் 'தெய்வமுற்று மெய்ம்மயிர் நிறுத்துக் கையெடுத்தோச்சி”க்