உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் – பொருள்

55

காட்சி தருகின்றாள். தெய்வமேறப் பெற்ற அவளை அருஞ் சொல் உரைகாரரும், அடியார்க்கு நல்லாரும் 'தேவராட்டி' என்கின்றர்.

எனல்

தெய்வமேறப் பெற்றவளைத் 'தேவராட்டி’ பொருந்துவதாம். அவ்வழக்கு சங்கநாள் தொட்டே வருவதாம். முருகனை நோக்கி நடாத்தும் வழிபாடு 'வெறியாட்டு எனப்படும். வெறியாடுபவன் 'வேலன்' என்றே சொல்லப் படுவான். இதனால், தெய்வத்தின் பெயர் தெய்வ வழிபாடு செய்பவனைக் குறிப்பதாக அமைந்தமை வெளிப்படை. ஆசிரியர் தொல்காப்பியனார்.

“வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன் வெறியாட்டு”

என்கிறார் (1006).

66

முருகயர்ந்து வந்த முதுவாய் வேல"

என விளிக்கிறது குறுந்தொகை

(362).

ஆடுபவன் கோலத்தை அருமையாக விளக்கிக் காட்டு

கிறது ஓர் அகப்பாட்டு(195).

66

'அறுவை தோயும் ஒருபெருங் குடுமிச்

சிறுபை நாற்றிய பஃறலைக் கொடுங்கோல் ஆகுவ தறியும் முதுவாய் வேல’

என்பது அது.

பூசகன்

-

இவற்றால், வேலனை வழிபடுபவன் - வெறியாடுபவன் வேலனாகக் குறிக்கப் பெற்றமையை அறியலாம். இதனைக் கொண்டு, தெய்வ வழிபாடு செய்பவன் ‘தெய்வம்’ எனப் பட்டான் என்பதும் தெளிவாகும்.

பழங்காலத்தில் எங்கும் கோயில் வழிபாடு தமிழிலேயே நிகழ்ந்தது; தமிழ்க் குடிகளே வழிபாடு செய்தனர். இன்றும் சிற்றூர்களில் புலவர், பூசாரி, பண்டாரம், வேளார் முதலிய தமிழ்க் குடிகளே வழிபாடு செய்பவர்களாக விளங்குகின்றனர். அவர்கள் தொழிலும், வழிபாடு செய்வதுடன் வழிபாட்டுக்கு இன்றியமையாத பூந்தோட்டம் வளர்த்தல், பூக்கட்டல், தெய்வவுருச் செய்தல் முதலியனவாக உள்ளன. ஊர்க் கோயில் வழிபாட்டைத் தம் கடப்பாடாகக் கொண்ட அவர்களைப்