உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

16 இளங்குமரனார் தமிழ் வளம்

பேணுதல் ஊர்ப் பொதுக் கடமையாக இன்றும் இருந்து வருகின்றது. ஊர்ப் பொதுக் கடமை என்பது ஒவ்வொரு வீட்டார் கடமையும் அல்லவோ!

கோயில் வழிபாடு 6

செய்பவர்க்குச்

சிற்றூர்களில் ‘சுதந்திரம்’ என்னும் கொடை வழங்குதல் இந்நாள் வரை நடைமுறையிலேயே உள்ளது. உழவர்கள் ஒவ்வொரு விளைவின் போதும் களத்திலேயே இத்தனை 'மரக்கால்' தவசமென அளந்து கொடுத்து வருதல் வழக்கம். கூலி வேலை செய்வாரும் ஆண்டுக்கு இவ்வளவு தொகையெனக் கொடுத்து வருவர். ஊர்க் கடமை செய்தற்கு உரிமைப் பட்ட வருமானம். ஆதலால், அது ‘சுதந்திரம்’ (சுவந்திரம்) என வழங்கப்படுகின்றது. இவ் வழக்குண்மை தெய்வம் என்பதன் பொருளை நெட்டிடை பட்டும் திட்டமாக வெளிப்படச் செய்கின்றதாம்.

சிலம்பின் நிறைகாதை வரந்தரு காதை; அக்காதையில் கண்ணகியார் காப்பியத்தைக் கற்றவரும் கற்கக் கேட்ட வரும் நிற்கத் தக்க ஒழுகலாறுகள் இவை எனச் சுட்டிக் கூறி, நிறைவிக்கிறார் இளங்கோவடிகளார். அதில் தலைமையிடத்தினைப் பெறுவது :

“தெய்வந் தெளிமின் தெளிந்தோர்ப் பேணுமின்”

என்பது.

"தெய்வவுண்மையைத் தெளிக; அவ்வாறு தெளிவுறக் கண்டாரைப் பேணுக' எனக் கூறுவது தெய்வம் ஓம்புதலை விளக்குவதாம். தெய்வந் தெளிந்தாரைப் பேணுதல் “தந்தை தாய்ப் பேண்” என்பது போல ஓம்புதலே அல்லவோ! ஆதலால் தெய்வம் என்பது தெய்வவுண்மையறிந்து திருக்கோயில் வழிபாடு செய்வார் என்னும் பொருளதேயாம். விருந்து என்னும் புதுமைப் பெயர் புதிது வருவாரைக் குறித்தது போலத், தெய்வம் என்னும் பெயர் தெய்வ வழிபாடு செய்வாரைக் குறித்ததாம்.

17. விருந்தில் விருந்து

விருந்து என்பது புதுமைப் பொருளது.

66

விருந்தே தானும், புதுவது கிளந்த யாப்பின் மேற்றே’ (தொல். 1495) என்பது தொல்காப்பியனார் தொன்மொழி.