உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

'இவளோ

தமிழ் வளம் பொருள்

57

கொங்கச் செல்வி குடமலை யாட்டி

தென்றமிழ்ப் பாவை செய்த தவக்கொழுந்(து)

ஒருமா மணியாய் உலகிற்(கு) ஓங்கிய

திருமா மணியெனத் தெய்வ முற்ற”

(சிலப் 12, 470).

சாலினி கண்ணகியைப் பாராட்டி யுரைக்க, கண்ணகி கோவலன் பின்புறம் தழுவி ஒதுங்கி மறைந்து முறுவலித்து நின்றாள். அம்முறுவலை ‘விருந்தின் மூரல்' என்பார் அடிகள். உள்ளகம் ஒளித்து இடை இட டை அரும்பிய மூரல், 'விருந்தின் மூரல்' தானே?

விருந்தினர் வரக் காணின் இளையர் களிப்பர்; முதியர் மகிழ்வர். வறிய வீடும் வாழ்வுக் கோலம் பூண்டு வயங்கும். ஊட லில் தவித்துத் தனித்திருக்கும் கணவன், மனைவியரும் ஆடிப் பாடிக் கூடி மகிழ்வர். ஆகவே “விருந்தில்லா வீடு விழல்” (பெருந்தொகை : 406) என்று தனிப்பாடல் ஒன்று உரைக்கும்.

பண்டைத் தண்டமிழ்ப் பண்பாடுகளுள் தலைமை சான்ற விருந்தினை விளக்கப் புகின் விரியும். ஆகலின் கொண்ட தலைப்புக்கு ஏற்ப விருந்தாக விளங்கும் விருந்துக் குறண் மணி ஒன்றனைக் காண்போம் ;

“விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று'

(குறள். 82)

(1) “உண்ணப்படும் பொருள் அமிர்தமே எனினும் தன்னை நோக்கி வந்த விருந்து தன் இல்லின் புறத்ததாகத் தானே, உண்டல் விரும்புதல் முறைமை உடைத்தன்று” என்பது தெரிமாண் புலமைப் பரிமேலழகியார் உரை. விருந்தோ, தன்னை, நோக்கி வந்தது. இருப்பதோ, 'தன்' இல்லில். உண்பதோ, 'தான்' மட்டும் (தானே) என்று மூன்று இடங்களில் தான் என்பதைக் காட்டிப் பொருட்கு நயமூட்டுகின்றார் அவர். சாவா மருந்து ‘சாவாமைக்குக் காரணம் ஆகிய மருந்து' என்று அமிர்தெனக் கொண்ட பொருட்குக் குறிப்பு விளக்கம் செய்கின்றார். ‘மூவா மருந்து' என்னும் சிலம்பின் செம்மொழிக்கு “மரண மின்மையைப் பயக்கும் அமிழ்து. 'மூவா : மூத்த வென்னும் பெயரெச்ச எதிர்மறை. எனவே மூப்புக்கும் பிணிக்கும் மருந்தென்பதாயிற்று; என்றது அமிர்தத்தை” என்று விளக்கவுரை செய்கின்றார் அடியார்க்கு நல்லார்.“ஏவா மக்கள் மூவா மருந்து"