உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

இளங்குமரனார் தமிழ் வளம் – 16

என்னும் ஔவையார் மொழிக்கும் இப்பொருளே செய்கின்றார் ஆறுமுகநாவலர். மூவா மருந்து, சாவா மருந்தெனக் கொள்க. பரிமேலழகியார் உரைக்கு விரிவுரைபோல் காளிங்கர் உரை

உள்ளது.

66

விருந்து தன் கடைப்புறத்ததாகப் பெற்று வைத்துத் தான் அகத்தில் இருந்து உண்டலாகின்ற இது சாவாப்பதந் தருவதாகிய அமரர் உலகத்து அமுதமே ஆயினும், தான் விரும்பும் பான்மை நன்றன்று. தானுண்டு சாகின்ற சோற்றிணை மற்று இல்லத்திற்கு நல்வழிப் பாடாகிய விருந்து தன் கடைப் புறத்ததாகப் பெற்று வைத்து மற்றிதனைத் தானுண்டல் எக் கூற்றின் இடத்ததோ அறிகிலேன்.'

பிற்பகுதியின் விளக்கம் மிகச் சிறக்கின்றது.

சாவா மருந்து தேவ அமுதம்' என்கிறது ஒரு பழைய உரை (பக். 23). இதனை ஏற்ற மற்றொரு பழைய உரை “விருந்து புறத்திலே இருக்கத்தான் பொசிப்பது (புசிப்பதது) தவிர்க்க. சரீரத்திலே பதினெட்டுக் குட்டமும் தீரப் பொசிக்கிற அமிர்தம் ஆயினும் விருந்துடன் கூடியிருந்து பொசிப்பர்.” (திருக்குறள் உரைவேற்றுமை பக். 85) என்று அமுதச் சிறப்பை விளக்கிக் கூறுகின்றது.

ம்

இவ்வளவும், 'சாவா மருந்து' அமிழ்து' என்னும் பாருட்டது. 'அமிழ்தமே எனினும் விருந்தினரைப் புறத்தே வைத்து உண்ணற்க' என்பதே இவற்றின் திரண்ட கருத்து.

66

(2) விருந்தினர் இற்புறத்தாராகத்தானே உண்டல் சாவாமைக்கு உண்ணும் மருந்தாயினும் வேண்டும் பகுதி உடைத் தன்று" என்று மணக்குடவர் இக்குறட்கு உரை கூறுகின்றார். ‘சாவா' என்பதை ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சமாக்கிச் சாவாத மருந்து (சாவாமைக்கு உண்ணும் மருந்து), சாவினைத் தாராத மருந்து என்று கொண்டு பொருள் செய்கின்றார் அவர்.

'மருந்தே ஆயினும் விருந்தோடுண்' என்னும் தொன் மொழியைக் கருத்திற் கொண்டது இவ்வுரையாகும். இப் பொருளையே ஏற்றுக் கொண்ட புலவர் குழந்தையார் ‘உண்டிக் கழகு விருந்தோ டுண்டல்' என்று சான்று காட்டுகின்றார்.

(3) இனிப், பரிதியார் 'விருந்து புறத்திலே இருக்கத் தான் உண்பது நன்றல்லது! நஞ்சாகிலும் கூட விருந்து புசிப்பது நன்று' என்கிறார். அவர் சாவா மருந்து என்பதனைச் சாவதற்குரிய