உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

தமிழ் வளம் பொருள்

59

மருந்து (நஞ்சு) என்று பொருள் கொண்டார். அவர்க்குச் செய்யா என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சம் முன்னின்று துணை புரிந்தது. சாவா மருந்து சாவும் மருந்து (நஞ்சு) புறத்ததா என்ற சொற்கொண்டு ‘கூட விருந்து' என்று தெளிவு காட்டினார்.

இவ்வுரைக்கு,

“பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர்”

என்னும் அகச் சான்றும்,

66

(குறள். 580)

‘முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்

நஞ்சும் உண்பா நனிநா கரிகர்”

“நஞ்சுயிர் செகுத்தலும் அறிந்(து) உண்டாங்கு"

என்னும் புறச் சான்றுகளும் வலுவூட்டுகின்றன.

66

‘ஏனது சுவைப்பினும் நீகை தொட்டது

வானோர் அமுதம் புரையுமால் எமக்கு’

என்னும் ஆசான் மொழியும்.

“வேம்பின் பைங்காய்என் தோழி தரினே

தேம்பூங் கட்டி என்றனிர்

(நற்றிணை. 855)

(கலி, 74:8)

(தொல். 1092)

(குறுந். 196)

என்னும் குறுந்தொகைக் குறிப்பும் இப்பொருட்கு ஆக்கஞ் சூழ் கின்றன. நட்பும் காதல் கூட்டத்துள் அடங்கும் ஒன்று தானே!

(4) சாவா மருந்து என்பதற்கு "உயிரைப் போக்காது நிறுத்தவல்ல கஞ்சி என்னும் உரையும் உண்டு” என்பது பரிதி யார் தழுவல் உரை.

“உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே

உண்டி முதற்றே உணவின் பிண்டம்”

(புறம். 18)

என்பதால் உணவே உடலையும், உயிரையும் காத்தலால் உயிர் காக்கும் அமுதம் உணவாக ஆயது. வழக்கிலும் ‘அமுதிடுக', அமுதுண்க’, ‘கண்ணமுது’ (பாயசம்), ‘பாலமுது' (பாற்சோறு) என்பன போல உள. மாதிரி மனைக்கண் ஐயை துணையால் சோறாக்கிய கண்ணகி, கோவலனை ‘அமுதம் உண்க அடிகள்' (சிலம்பு. 16 : 19) என்று விளித்தழைப்பது அமுதம் உணவென்ப தற்குரிய ஒரு சான்றாகும். இவர் கஞ்சி என்று கொண்டதோ.