உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

இளங்குமரனார் தமிழ் வளம்

16

66

‘அமிழ்தினும் ஆற்ற வினிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்”

(குறல். 64)

என்பது போல உணவுப் பொதுமை சுட்டுவதாகக் கருதுதல் சாலும். அன்றியும் உணவுக்காக உயிர்ப் போராட்டம் செய்யும் ஏழையர்க்குக் கிட்டற் கரிய உணவாக இருக்கும் கஞ்சியே அவர்க்குயிர் ஆதலால் அவ்வாறு கருதிக் கூறினார் என்பதும் சாலும்.

(5) “விருந்து இன்றியே ஒருகால் தான் உண்டலைச் சாவா மருந்து என்பார் உளராயினும் அதனை ஒழிக” என்று உரைப்பினும் அமையும் என்று மற்றுமோர் உரையும் கூறுவார் பரிமேலழகர். “விருந்தின்றி உண்டால்தான் இஃது அமிழ்தாகும்; அன்றி விருந்தோடுண்ணின் நஞ்சாம் என்று எவரேனும் உரைப்பினும் அதனை விருந்து புறத்ததாக உண்ணற்க” என்பது அவர் கருத்தாம். புறத்ததா தான் என்பதை ஒன்றாக்கி ‘புறத்தாத் தான்’ - புறத்தே வைத்துத்தான் என்று அழுத்தம் கொடுத்துப் பொருள் காண அமைந்துள்ளது இப் பகுதி.

(6) சாவா மருந்து என்னுந் தொடருக்குச் ‘சாவாமைக்குக் காரணமாகிய மருந்து' என்னும் உரையை மறுத்து, "மருந்து என்றாலே சாவாமைக்குரிய பொருள் தொனித்தலின் சாவா என்ற சொல்லை மருந்து என்னுஞ் சொல்லுக்கு அடையாகக் கொள்ளக் கூடாது” என்று கூறிச் 'சாவா' என்னுஞ் சொல்லைச் ‘சாவாம்' என்று முற்றாக்கி, ‘விருந்தினர் புறத்தே இருக்கத்தான் உண்பது சாவோடு ஒக்கும், என்று திருக்குறள் சண்முக விருத்தியில் உரைக்கின்றார் பெரும்புலவர் அரசஞ்சண்முகனார். ‘செத்தார்க்கு வாய்க்கரிசியும், வாய்ச் சோறும்' போடும் வழக்கம் உண்டல்லவா அவற்றை உட்கொண்ட உரை அது.

(7) பிறப்பை ஒட்டி மேல் கீழ் வகுப்புகள் தோன்றிய போது சில இடங்களில் மேல் வகுப்பார் என்றவரிடை விருந்தினரை விடுத்து உண்ணும் வழக்கமும் உடன் தோன்றி இருக்கும். அதைக் கடியும் நோக்குடன் இப்பாட்டை ஆசிரியர் அருளியிருக்கலாம்.

“தாம் உண்ட பின்னர் விருந்தினரைப் பேணும் வழக்கம் இந்நாளிலும் சிலரிடை இருந்து வருதல் கண்கூடு. தாம் உண்ட பின்னர் விருந்தினரைப் பேணுவது அந்தண்மையை அடிப் படையாகக் கொண்ட விருந்தோம்பல் ஆகாது” என்பது தமிழ்த் தென்றல் திரு. வி. க. காட்டும் விரிவுரையாகும். பிறப்புக் காரணத்தால் புறத்தே வைத்து உண்பதையும், வீட்டார்