உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம்

பொருள்

61

உண்டபின் விருந்தாளியை உண்பிப்பதையும் கடியும் உரை ஈதென்பது தெளிவு. "சில கூட்டத்தினர் முன் உண்டு பின் விருந்தினரைப் போற்றும் முறையை ஆசிரியர் கண்டித்ததாகவும் கொள்ளலாம்" என்று திரு. வி. க. வின் பிற்பகுதி உரையை ஏற்று, 'சிறு சோற்றானும் நனிபல கலத்தன் மன்னே’, (புறம் 25) என்று அதியமான், விருந்தினரைப் போற்றியதை ஔவையார் உரைச் சான்றால் நிறுவுகின்றார் திருக்குறள் உரை விளக்க ஆசிரியர் வரதராசனார் (பக். 38).

(8) 'வந்த விருந்தினரைப் பேணியதாக மேல் வருவிருந்துக்கு உதவாது தான் உண்ணுதல் வேண்டத்தக்கது அன்று” என்பது மற்றொரு பொருள், ஏனெனில்,

“செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்'

குறள்நெறி ஆதலால்.

(குறள். 86)

புறத்ததா(க) என்பது ஓம்பியதாக, பேணியதாக என்னும்

பொருள் உடையது.

ஈன்று புறந்தருதல் என்றலைக் கடனே

விருந்து புறந்தரூஉம் பெருந்தண் வாழ்க்கை

வெயில் புறந்தரூஉம்

புறந்தருதல், புறந்தரல் - ஓம்பல், தோற்றல்

(புறம். 312) (சிலம்பு. 2: 86)

(பேரகராதி. பக் : 771)

(மலைபடுகடாம். 374)

என்னும் சொல்லாட்சிகள் இவ்வுரைக்கு நிலைக்களமாக உள.

(9) உண்ணுக என்று விருந்தினரை வேண்டிய போது ‘உண்டேன்', 'உண்டு வந்தேன்’, ‘உண்ணச் செல்கின்றேன்’, ‘உண்டற்கியலாது’, ‘நீவிர் உண்க' என்று விருந்தினர் கூறுவதுண்டு. அத்தகைய நிலையிலும் அவரைப் புறத்தே வைத்து உண்ணல் கூடாது. சாவா மருந்து, என்பதைச் ‘சாவாம்; அருந்து’ என் பிரித்து இவ்வுரை கொள்ளப் பெறுகிறது.

தான்’

று

(10) ‘விருந்தினர் ஒருவர் இல்லின் புறத்தே இருந்து உண்டால் அமுது என்பா உளராயினும், புறத்தே இருந்து ழிபாடுற உண்ணற்க என்பது இன்னொரு பொருள். இது விருந்தினரின் மானப் பொருள், மரபுப் பொருள் கருதிய ய பொருள்.

(11) "விருந்தாளி வெளியேயிருந்து உண்பது சாவோடு ஒக்கும் (ஆதலால் அதனை விடுக்க). அருந்து என்று ஒரு முறை