உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

இளங்குமரனார் தமிழ் வளம் 16 ✡

கூறிய அளவில் உண்பதும் கூடாது” என்பது பிறிதொரு பொருள்.

“உண்ணீர் உண்ணீர் என்றே ஊட்டாதார் தம்மனையில் உண்ணாமை கோடி யுறும்”

என்பது ஔவையார் பாடிய ஒருகோடி பாட்டு அல்லவா!

(திருக்குறள் நயவுரை. பக் 24)

தமிழர் விருந்துப் பண்புகள் அனைத்தும் ஓருருக் கொண்ட தாகக் திகழும் இந்த ஓரடி முக்காற் சிறப்பை உரைத்தற்கரிது.

“ஓதற் கெளிதாய் உணர்தற் கரிதாகி

வேதப் பொருளாய் மிகவிளங்கித் - தீதற்றோர் உள்ளுதொ றுள்ளுதொ றுள்ளம் உருக்குமே வள்ளுவர் வாய்மொழி மாண்பு

99

(திருவள்ளுவ மாலை. 24)

என்னும் மாங்குடி மருதனாருடன் சேர்ந்து, விருந்தில் விருந்தாக இப்பாடலை நுகர்வோமாக.

18. தீயினால்

"தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு’

என்னும் திருக்குறளைத் தமிழறிந்தார் எவரும் அறிவர். “தீச் சுட்டபுண்” “தீயில் சுட்ட புண்” என்று கூறாமல் திருவள்ளுவர் ஏன் விரித்துரைத்தார்? இன்னும் ஆலும் சேர்த்துத் தீயினால்

என்பானேன்?

தீக்கங்கு அடுப்புப்பக்கம் கிடக்கிறது; அதனை அறியாமல் ஒருவர் மிதித்துவிட நேர்கின்றது. அது சுட்டு விடுகிறது; அதனை எப்படிக் கூறுவது? ‘தீச்சுட்டது' என்றோ, ‘தீச்சுட்டு விட்டது' என்றோ கூறுவதே வழக்கம். 'தீயால்' என்றோ, 'தீயினால்’ என்றோ கூறும் வழக்கம் இல்லை. தீச்சுடுதல் என்பது தீக்கு இயற்கையும், சுடுபட்டவர்க்கு அறியாமையும் காட்டுவது.

தீயில் சுடுதல் என்பது ஊண் பொருளை வாட்டித் தின்ப தற்குப் பயன்படுத்தும் முறை. கிழங்கு சுட்டுத் தின்னல், மொச்சைக்காய், நிலக்கடலை ஆகியவை சுட்டுத் தின்னல்