உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வ

தமிழ் வளம் - பொருள்

63

என்பவை இன்றும் வழக்கில் உள்ளவை. வாட்டித் தின்னல் என்பது மேலெழும்பும் தீயில் வாட்டுதல். சுடுதல் என்பது கங்கில் படச் செய்து வெதுப்புதல்.

தீச்சுடுதல், அறியாது நிகழ்ந்தது; தீயிற்சுடுதல், விரும்பிச் செய்தது. இவ்விரண்டிலும் வேறாயது தீயாற் சுடுதல் அல்லது தீயினாற் சுடுதல்.

ஆல்' என்பது மூன்றாம் வேற்றுமை உருபு. “வாளால் வெட்டினான்” “கத்தியால் குத்தினான் என்று வழங்கும் என்று வழக்கினைக் கருதுக. திட்டமிட்டும் தீர்மானித்தும் செய்கின்ற செயலே வெட்டுதல், குத்துதல் என்பதும், அதனை அறிவிப்பதே 'ஆல்' என்பதும் தெளிவாம். இங்கே தீயினால் சுடுதல் என்பது இயல்பாக நிகழ்ந்ததன்று என்பதும், திட்டமிட்டுத் தீர்மானித்துச் செய்யப்பட்டது என்பதும் தெளிவாம். வாளால் வெட்டினான் என்றால் எழுவாய் மறைந்திருத்தல் தெளிவு. அதுபோல் இங்கு எழுவாய் மறைந்துள்ளது.

66

'வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால் மாளாதகாதல்" கொள்வதை நாலாயிரப்பனுவல் பாடும்.

ச்

சு

“உடலிடைத் தோன்றிற்றொன்றை, அறுத்ததன் உதிரம் ஊற்றிச் சுட்டுறச் சுட்டு வேறோர் மருந்தினால் துயரம் தீர்வதை’' இராமாயணம் இசைக்கும். இச் சுடுதல்கள் நலப்பாட்டுச் சுடுதல்கள். சுடப்படுவார் நலத்திற்காகச் சுடத்தக்கார் தம் கடனெனக் கொண்டு செய்வன. ஆனால், இத்தீயினால் சுடுவதோ தீய நெஞ்சத்தின் வெளிப் பாடாய்த் தீமை செய்வதே நோக்காகிச் செய்யப் படுவது. காலையும் கையையும் கட்டிப் போட்டு அல்லது திமிராமல் கட்டிப் பிடித்துக் கொண்டு கண்ணிலே கொள்ளிக் கட்டையால் இடிப்பது அல்லது செலுத்துவது போல்வது. இந்த வன்கொடுமையைக் காட்டுவதற்காகவே ‘தீயினால்' என்றார் திருவள்ளுவர்.

புண் ஆறுதலிலும் இருவகை உண்மையைத் தெளிவிக் கிறார் திருவள்ளுவர். புறத்தே ஆறுதல்; அகத்தே ஆறுதல் என்பவை அவை. சில புண்கள் புறத்தே ஆறியது போல் தோன்றும். ஆனால் அகத்தே ஆறி இராது. அகத்தே குடைந்து குழிப் புண்ணாகிக் காண்டே இருக்கும். புறத்தே புண் ஆறியிருப்பினும் அகத்தே புண்ணின் தடம் முற்றாக மாறாமலும் ஆறாமலும் ஒவ்வொரு வேளையில் வலியுண்டாகும். புண் பட்ட இடத்தில் ஏதேனும் ஒன்று மெல்லெனப் பட்டாலும்