உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

16 இளங்குமரனார் தமிழ் வளம்

குலையுயிரும் குற்றுயிருமாகத் துடிக்க வைக்கும். அந்நிலையும்

ஓராண்டு ஈராண்டன்றிப் பல்லாண்டுகள் உளதாதல் பட்டார்க்கே வெளிப்பட விளங்கும்! 'உள்ளாறுதல்' என்னும் இவ்விளக்கம் பட்டறிவால் உரைத்ததென்று உறுதியாகச் சொல்லலாம். குறளுக்கு மெய்ப்பொருள் காண்டற்குப் பட்டறிவும் இன்றியமையாதது என்பதற்கே இக்குறிப்பாம் என்க. தேடி வந்து தீயால் சுட்டவன் எவனோ அவனே, அப் பொழுதிலோ வேறு பொழுதிலோ நாவினாலும் வன்கொடுஞ் சொல்லால் சுடுகின்றான். அத்தீயால் சுட்ட புண் புறத்தே ஆறுவதுடன் உள்ளாலும் ஒருகால் ஆறிவிடும். ஆனால், நாவினால் சுட்டது, உள்ளால் ஒருநாளும் ஆறவே ஆறாது! நிலை பெற்றே போய்விடும்! எப்படி நிலைபெற்றுப் போய்விடும் என்றால், உடலில் தீச்சுட்டதால் அமைந்த வடு (தழும்பு) மாறாமை போல ஆறாது என்கிறார். எடுத்துக் காட்டும் ஆக்கி விடுகிறார்; தீக்கொடுமையிலும் தீச்சொற் கொடுமையே பெருங் கொடுமை என்னும் இதனைத்

“தீயினால் சுட்ட செம்புண் உள்ளாறும் அத்தீயிற்றீய வாயினால் சுட்ட மாற்றம் மாறுமோ வடுவேயன்றோ"

என்றது வில்லிபாரதம்.

“தீயவை தீய பயத்தலால்” என்னும் குறளைத் “தீயவே தீய பயத்தலால் தீயவே, தீயினும் அஞ்சப் படும்" என அரசஞ் சண்முகனார் பாடங்கொண்டதும் எண்ணத் தகும்.

19. தமிழ்க் ‘கா. சு.’ திருக்குறள் தெளிவுரை

கா. சு. அவர்கள் திருக்குறளுக்குத் தெளி பொருள், விளக்கப் பொழிப்புரை வரைந்துளர். அதன் முதற்பதிப்பு 1928 இல் வெளி வந்தது. அதனை வெளியிட்டது சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகம். ஏறத்தாழ ஒரு பதின் பதிப்புகளை அது கொண்டுள்ளது. பொதுமறை, பாயிரம்

திருக்குறள் ‘பொதுமறை' எனச் சுட்டும் ஆசிரியர், ஆதித் தமிழ் நான்மறைகள் மறைந்த பின்னர் அந்நான் மறைக்கருத்துகளை விளக்கு முகத்தான் ஆசிரியர் திருவள்ளுவரால் செய்யப் பட்டது என்னும் கருத்தைப் பாயிரத்தில் வைக்கிறார். அப் பகுதியிலேயே கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் என்னும் முதல் நான்கு அதிகாரங்களும்