உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளின் யிடுகின்றார்.

தமிழ் வளம் - பொருள்

'பாயிரம்'

சிவநெறியும் பொதுவும்

65

என்னும் கருத்தையும் வளி

திருக்குறள் வேதவழிப்பட்டது என்பது பரிமேலழகர் முதலிய உரையாசிரியர்களின் கருத்து. அதனைக் கருத்தில் கொண்ட தமிழ்க் ‘கா. சு.’ தமிழ்ச் சைவ நெறிப்பட்டவர் என்னும் கருத்தை நிலைநாட்டுவார் போலக் கடவுள் வாழ்த்தின் உரையை வரைகின்றார்.

முதற் குறளில், “உலகத்திலே உடம்பெடுப்பதற்கு அருட் சத்தியோடு கூடிய கடவுளே காரணமாதலால் உலகம் மாதொரு பாகனாகிய கடவுளைத் தலைவனாக வுளைத் தலைவனாக உடையது” என்றும், வான்சிறப்பு முகப்பிலே “மழைச் சிறப்புக் கூறுதல் திருவருட் சத்தி வணக்கங் கூறுதலாக முடிகின்றது என்றும், மலர்மிசை ஏகினான் என்பதற்கு உயிர்களது உள்ளக் கமலத்தின் மேலிடமாகிய பரவெளியிலே கூத்து இயற்றுகின்ற கடவுள்...' என்றும் கூறுவனவற்றாலும் பிறவற்றாலும் இது விளங்கும்.

66

சிவநெறி வழிப்பட்டது பொதுமறையோ என வினவுதலுண்டாயின், தென்னாடுடைய சிவன் எந்நாட்டவர்க்கும் இறை என்னும் மணிமொழி, மறுமொழியாம் எனக் கொண்டு உரை கண்ட ாராகலாம்.

புத்துரை

66

“ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி”

என்னும் குறளுக்குப் “புலன்களிற் செல்கின்ற அவா ஐந்தினையும் அடக்கினானது வலிக்கு அகன்ற வானத்துள்ளார் இறைவனாகிய இந்திரனே அமையும் சான்று” என்று உரையும், "தான் ஐந்தவியாது சாபம் எய்தி நின்று அளித்தவனது ஆற்றல் உணர்த்தினான் ஆகலின் இந்திரனே சாலுங் கரி என்றார்” என்று விளக்கமும் வரைந்தார் பரிமேலழகர். பிறரும், இவ்வுரைக் கருத்தே கொண்டு வரைந்தனர்.

கா. சு. "ஐம்பொறிகளையும் அடக்கியவனது வல்லமைக்குப் பெரிய விண்ணுலகத்திலுள்ள தேவர்கள் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்றாவன்” என்கிறார்.

எதிரிடை வழியால் ஐந்தவித்தான் ஆற்றலைப் பரிமேலழகர் காட்டியதை ஒவ்வாத கா. சு, நேரிடை வழியால் காட்டுதல்