உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

இளங்குமரனார் தமிழ் வளம் – 16

நூலாசிரியர் முறை வழியில் செல்வதாம். இது, முற்றிலும் அழகர் உரைக்கு மறுப்புரையாம்.

நுண்ணிய ஆய்வு

பிறர் உரையை ஏற்று ஒருமருங்கு மறுப்பார் போல் நுண்ணிய வேறுபாடு காட்டவும் செய்கிறார். கா. சு.

'தெய்வம் தொழாஅள்'

என்னும் குறளுக்குப் “பிற தெய்வந் தொழாது தன் தெய்வமாகிய காழுநனைத் தொழா நின்று துயிலெழுவாள் பெய்யென்று சொல்ல மழை பெய்யும்" எனப் பரிமேலழகர் உரை கண்டார். கா. சு. “தெய்வத்தைத் தொழாத போதும் கணவனையே தெய்வமாகத் தொழுது காலையில் எழுகின்றவள், மழையைப் பெய்யென்று சொல்ல அது பெய்யும்" என்கிறார்.

பெய்யெனப் பெய்யும் மழை போல்வாள் என உவமைப் படுத்து உரைப்பார் உளராயினும் கா. சு. அதனைக் கொண்டிலர் என்பதும், தொழாஅள் தொழுதெழுவாள் என்பதற்குப் புத்துரை வகுக்கிறார் என்பதும் எண்ணத்தக்கன.

இவ்வாறே மக்கள் மெய் தீண்டல் என்னும் தொகைச் சொல்லுக்குப் "பெற்றோர், மக்களது மெய்யைத் தீண்டுதல்” எனப் பரிமேலழகர் பொருள் கொள்ள, “மக்கள் பெற்றோரது உடம்பைத் தீண்டுதல்” எனக் கா. சு. உரை கொள்ளத் தீண்டுவார் தீண்டப் படுவார் மாற்றியுரைக்கப் படுதல் அறியத் தக்கதாம்.

குழந்தையரின் மழலைச் சொல் பெற்றோர் காதில் விழுந்து இன்புறுத்துதல் போல், அவர்கள் மெய்வந்தும் விழுந்து இன் புறுத்துவதாகக் கொள்ளலே பொருந்தும் உரையாம் எனக் கா. சு. கண்டுரைத்தார் எனலாம்.

உரைமேல் உரை

குறளை எழுதிப் பொழிப்புரை எழுதும் கா. சு. தழுவல் உரையாகவும், பிறருரையாகவும் குறித்தலும் மேற்கொண்டார்.

தென்புலத்தார் என்பதற்குப் பொருள் கூறும் கா. சு. "இறந்த உயிர்க்குத் துணை நிற்கும் பிதிரர்கள்” என்கிறார். மேலும் “தென்புலத்தார் என்பார் தமிழ்நாட்டுப் புலவரெனவும், தமிழர் குருமார் எனவும் கூறுவாரும் உளர்” என்கிறார்.

தம்மின் தம் மக்கள் என்னும் குறளில் வரும், மன்னுயிர் என்பதற்கு ‘உள்ள உயிர்' என்று உரை கூறுவதுடன், ‘மன்னுயிர்