உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் – பொருள்

67

என்பது அறிஞரைக் குறிக்கும் என்பாரும் உளர்” என்றும் வரைகிறார்.

66

“செய்யாமல் செய்த உதவிக்கு” என்னும் குறளுக்கு உரை வரைந்து அதன்பின் வேறொரு வகையில் பொருள் கோடலுண்டு என வரைகின்றார். இவ்வாறே வேட்ட பொழுதில் என்னும் குறளுக்கும் ஈருரை காட்டுகின்றார்.

ஓருரை கூறுவதுடன் அல்லது என்னும் குறிப்புடன் ஈருரையும் தகும் என்னும் முறையிலும் உரை வகுக்கின்றார்.

“நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன்

என்னும் குறளில் வரும் ‘காமக் கலன்' என்பதற்கு “விரும்பி ஏறும் மரக்கலங்களாம் அல்லது விரும்பிப்பூணும் அணிகளாம் என்பது இதனை விளக்கும். ஆயின் இவ்வுரை இரண்டும் பரிமேலழகர் உரைக்கண் வருவனவே. இவ்விரண்டின் ஒன்றைத் தெரிந்து சுட்டாமல் இரண்டையும் ஒப்புக் கொண்டார் இவர் என்க.

லன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல் என்பதற்கு நான்கு உரைகள் உரைக்கிறார். கா. சு. பரிமேலழகர் முதலாம் உரையாசிரியர் உரைத்தனவே.

இவ்வாறே “அடியளந்தான் தாயது” “தாமரைக் கண்ணான் உலகு என்பவற்றுக்கும் பிற்கால உரையாளர் வேறு வேறு புத்துரை கண்டாராக அவ்வுரையிடைக் கருத்தைச் செல விடாமல் பண்டையுரையாசிரியர்களின் உரையைத் தழுவியே செல்கிறார்.

இவற்றை நோக்கும்போது ஒரு கருத்துத் தெளிவாக விளங்குகின்றது. திருக்குறளின் பொருளை எளிமையாக எவரும் விளங்கிக் கொள்ள வேண்டும் என்னும் எண்ணத்திலேயே கா. சு. உரை எழுதியுள்ளார் என்பதாம். இதனைத் தெளிபொருள் விளக்கப் பொழிப்புரை என்னும் பெயரீடும் விளக்குவதாம். விளக்கவுரை

கா. சு. உரை பொழிப்புரை எனப்பட்டாலும், அது தெளி பொருள் விளக்கப் பொழிப்புரை என்பதற்கு ஏற்பவும் நடை யிடுதல் விளங்குகின்றது.