உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

இளங்குமரனார் தமிழ் வளம் 16

சிறப்பொடு பூசனை செல்லாது என்பதற்கு "முதலிலே பூ திருவிழா நின்று பின்பு வழக்கப் பூசையும் நின்று நின்றுபோம் என்றவாறு' என்கிறார்.

66

ஒல்லும் வகை என்பதற்கு இயலும் வகை எனப் பொருள் கூறி உடம்பின் நிலைக்கும் பொருளின் அளவிற்கும் தக்கபடி செய்தலே இயலும் வகை செய்தல் என்பது" என்கிறார்.

அன்பிலார் எல்லாம் தமக்குரிய என்பதற்கு “தம் பொருட்டே எல்லாவற்றையும் தேடித் தமக்கே உரிய தாக்கிக் கொள்வர்” என உரை விரிப்பதும், உயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு என்பதற்கு, “உடம்பு எடாத போது அறிவதற்கு அரிய உயிர்க்கும் எலும்பினை அடிப்படையாக உடைய உடம்பிற்கும் உண்டாகிய தொடர்பு” என உரை விரிப்பதும் பேருரை ஒப்பவை.

L பனைத்துணை என்பதற்குப் பனையளவு எனப் பொதுப் பொருள் குறித்தாலும் அப் பனைப் பெயர் தூண்டுதலால் “ஏனை மரங்கள் போலாது பனை சிறிய உதவி கொண்டு பெரும் பயன் விளைத்தல் காண்க” என்று விளக்குவது அம்மரபியல் அறிந்த சிறப்பு வழிப்பட்டது.

காலத்தினால் செய்த உதவி ஞாலத்தில் பெரிது எனவும், பயன் கருதாமல் செய்த உதவி கடலிற் பெரிது எனவும், நிலையில் மாறாது அடங்கியவன் தோற்றம் மலையிற் பெரிது எனவும் வள்ளுவர் கூறுவார். அதனை விளக்கும் ‘கா, சு’ உவமையிலும் பொருள் உயர்ந்திருத்தலையும் நயமாக விளக்குகிறார்.

66

"நிலமானது காலத்தில் பயன் விளைப்பதியல்பு. அது காலத்தில் பயன் விளையாமையும் உண்டு. அக்காலத்திலும் நன்றி செய்வார் சிறந்தவர்” என்றவாறு.

"கடல் தன்பால் மேகம் கொண்ட நீரை மட்டும் பெறுகின்றது. அங்ஙனம் பெறாதார் கடலினும் சிறந்தவர்” என்றவாறு.

66

‘தானே உயர்வுடைய மலையினும் தனது ஆற்றலால் உயர்ச்சி பெற்றவன் பெரியவன்" என்றவாறு.

வை 'மாண' 'இல்' என்னும் சொற்களை நோக்கி வள்ளுவர் உள்ளம் உணர்ந்து உரைக்கும் நயத்தனவாம். கா. சு. வழங்கும் கொடையாம்.

குறிப்புரை கருத்துரை

வை

பொழிப்புரையே பெரிதும் எழுதும் கா, சு, சில இடங் களில் குறிப்புரை கருத்துரை ஆகியனவும் வரைகின்றார்.