உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - பொருள்

69

“விண்ணின்று பொய்ப்பின்" என்னும் குறளில் “கடல் சூழ்ந்த என்பதனால் கடல்நீர் அளவின்றியிருந்தும் அது பசி நீக்க உதவாது என்பது குறிப்பு" என்றும், “துறந்தார் பெருமை என்னும் குறளில் “துறவிகளின் பெருமை அளவில் அடங்கா தென்பது கருத்து” என்றும், "எழு பிறப்பும்" என்னும் குறளில் “மக்கள் செய்யும் நற்கருமங்களால் பெற்றோரையும் தீயவை தீண்டா என்றார் ா என்றார்” என்றும், என்றும், “அன்போடியைந்த” என்னும் குறளில் “அன்பு செய்யாக்கால் உடம்பு எடுத்த பயன் யாது மில்லை என்பது கருத்து” என்றும், “சொற்கோட்டமில்லது என்னும் குறளில் "சொல்லில் மாத்திரம் செப்பமாக இருந்து மனம் ஒருபால் சாயப் பெற்றால் அது நடுநிலைமையாகாது என்றும் உரைக்கின்றார். இவ்வாறு சொல்வனவெல்லாம் தெளிவும் விளக்கமும் நோக்கியமை என்க.

و,

உழ

“ஏரின் உழாஅர்" என்பதற்குக் கலப்பையால் மாட்டார் என்னும் பொருள் கூறும் கா. சு. “செவ்வையாக உழவு செய்ய மாட்டாதார்” என்றும் பொருள் கூறுவதும் இரட்டுறல் பார்வையாம்.

சுருக்கமும் பெருக்கமும்

66

'ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலிற் காணப் படும்

என்பதற்குப் “பிணக்கில் தோற்றவர் வென்றவராவர்; அது புணர்ச்சியுட் காணப்படும்” எனக் குறள் பொலவே பொழிப்பையும்

சுருக்கியுரைக்கின்றார்.

66

“வேட்ட பொழுதின் அவையவை போலுமே

தோட்டார் கதுப்பினாள் தோள்”

என்பதற்குப் “புதிது புதிதாக இன்பஞ் செய்வன போலப் பூக்கள் நிறைந்த கூந்தலையுடைய இவளது தோள்கள் எப்பொழுதும் புதுமையான இன்பத்தைத் தருகின்றன” என்று பொழிப்புரைத்து விரும்பிய பொருள்கள் விரும்பியவுடனே கிடைத்தால் எப்படி இன்பந் தருமோ அப்படி இவளுடைய தோளும் இன்பந் தருவது என்பதும் ஒன்று” என்று மேல் விரிவும் தருகிறார். இதனினும் விரிவாக எழுதும் உரை விளக்கங்களும் உண்டு. அவற்றை முதற்குறள் உரையிலும், 'வினைபகை' என்னும் 674 ஆம் குறளுரையிலும் காண்க.