உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

அதிகார ஆய்வு

இளங்குமரனார் தமிழ் வளம்

16

அதிகாரத் தலைப்பு, பொருள், தொடர்பு ஆகியவற்றையும் உன்னிப்பாக நோக்கி உரை வரைந்தனர் காசு.

ஏழாம் அதிகாரம் ‘புதல்வரைப் பெறுதல்' என்பது. இதனை, “ஒவ்வொரு குறளிலும் மக்கள் என்றே நாயனார் ஆண்டு வந்தமையின் இவ்வதிகாரப் பெயர் மக்கட்பேறு என மாற்றப்பட்டது” என்கிறார்.

இல்வாழ்க்கை என்பதற்கு "மனையாளோடு வீட்டிலிருந்து வாழ்தல்” என்னும் கா. சு. அதனை அடுத்து வரும் வாழ்க்கை நடக்கும் முறை கூறப்பட்டது. இவ்வதிகாரத்துள் ஆடவர் இல்வாழ்க்கை நடத்தும் முறை கூறப்பட்டது. இவ்வதிகாரத்திலே இல்வாழ்க்கைத் துணையாய மனைவி இன்ன நற்குணங்கள் உடையவளாய் இருத்தல் வேண்டும் என்பது குறிக்கப் படுகின்றது என்பது கூர்ந்து அறியத் தக்கதாம். இல்வாழ்வான் இல்வாழ்க்கை வாழ்பவன், வாழ்வாங்கு வாழ்பவன் என இல் வாழ்க்கை அதிகாரத்தில் வருபவற்றைக் கருதின் கா. சு. உரைநயம் புலப்படும்.

சொல்லாலும், பொருளாலும் இனியவாகும் சொற்களைச் சொல்லுதல் 'இனியவை கூறல்' எனவும் (10).

முன் நினைப்பு இல்லாமல் வருவித்துக் கொண்ட நோயைத் தீர்க்கும் ‘மருந்து' எனவும் (95).

அழகு துன்புறுத்தல் ‘தகையணங்குறுத்தல்' எனவும் (109) நற்செயல்களுக்காகப் பிறர் உதவியை நாடல் ‘இரவு' எனவும் (106).

இயற்கையாய் மனிதர்க்கு உளதாகிய பகுத்றிவுடைமையே இங்கு (அறிவுடைமை என) எடுத்துக் கொள்ளப்பட்டது எனவும் (43) அறுவகை மனக்குற்றங் களையும் நீக்குதல் ‘குற்றங்கடிதல்’ எனவும் (44) கூறுவன அவ்வதிகாரப் பிழிவாகிச் சிறக்கின்றன.

ஒப்புரவறிதல் என்பதை விரியநோக்கித் தெரியவரைகிறார்.

"ஒப்புரவு என்பது தம்மைச் சார்ந்த பிறரைத் தம் மோடொத்த நன்னிலை யடையும்படி செய்தல். அவருடைய குறைகளை உணர்ந்து அவற்றை நீக்குவதற்கு வழியறிதல் ஒப்புரவு எனப்படும். தம்முடைய குலத்தினருக்கும் நாட்டினருக்கும் இடர் வந்தபோது உதவுதல் ஒப்புரவு என்ப” என முப்பகுப்பில் வரைந்துளார்.