உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில விலக்குகள்

தமிழ் வளம் - பொருள்

71

இனி இகல் என்பதற்கு ‘மாறுபடுதல் (சினத்தல்)” என்று சுருக்கம் உரைக்கிறார். (76).

நட்பு என்பதற்கு 'சினேகம் இன்னதென்பது' என வட சொல்லை ஆள்கிறார். அவ்வதிகார உரையில் நேயம் மூன்றிடத்தும் நட்பு பத்திடத்தும் ஆளப்பெற்றுள. எண்ணியிருந்தால் சிநேக ஆட்சியை விலக்கியிருப்பார். என்னெனின் பிரமசரியம், வானப்பிரத்தம், சந்நியாசம் என வடநூலார் கூறுவனவற்றைக் கல்வி நிலை, மனத்தவ நிலை, துறவு நிலை எனத் தமிழாக்கம் செய்பவர் அவர் (41).

இனி அவையறிதல் என்பதற்குக் கழகத்தில் உள்ளவர்கள் நிலையை அறிந்து பேசுதல் என்றும், அவையஞ்சாமை என்பதற்குப் பேசுதற்குரிய கழகத்தைத் தெரிந்து பேசத் தொடங்கிய பிறகு அதற்கு நடுங்காமை என்றும் (72-73) விளக்கம் தருகிறார். ஆயின் வள்ளுவர் காலத்தில் கழகத்தின் பொருள் சூதாடுமிடமாகக் கொள்ளப் பெற்றதைக் ‘கா. சு.’ நன்கு அறிவார். கவறும் கழகமும் என்பதற்குச் "சூதாடுகளத்தில் இளமையிலேயே புகுவராயின் அல்லது சூதாடு களத்திலே ஒருவனுக்குக் காலம் போமாயின்” எனவும் (937) உரைவரைபவர் அவர். அறிஞர் அவையம் எனக் கழகத்திற்குப் பொருள் வரவு - கம்பர், பரஞ்சோதியார் முதலியோர் காலத்தின் ஆட்சிப்பட்டது. அதனை ஆள்தல் சைவசித்தாந்தக் கழகம், திருவிடர்கழகம், திராவிடர் கழகம் எனப் பெருவழக்கூன்றி விட்ட கால முத்திரைச் சான்றாம். உரையுள்ளும் கழகம், அவைக்களம்; அறிஞர் கூட்டம் என்பவற்றுடன் சபையையும் ஓரிடத்து ஆள்கிறார். (730).

இனிக் “கற்றிலனாயினும் கேட்க” (414) “நோக்கினாள் நோக்கி" (1093) என்பவற்றுக்குத் தெளிந்த வேறுரை காண வாய்ப்பிருந்தும் பரிமேலழகர் வழியில் எளிமைப் படுத்தும் அளவிலேயே கா. சு. அமைகிறார். “எற்றென்று இரங்குவ செய்யற்க" (655) குறளுரையும் அவ்வகையிலேயே அமைகின்றது. நிறைவு

கா. சு. 1928 இல் எழுதியது தெளிவுரை. பரிமேலழகர் உரையைத் தழுவி எளிமைப் படுத்தல் நோக்கிலும், மிக அரிதாகவே புத்துரை, புது விளக்கம் தருதலிலும் எழுதப்பட்டது என்பது தெளிவுறுகின்றது. பின்னர் அவர் இயற்றிய நூல்களில்