உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

இளங்குமரனார் தமிழ் வளம் – 16

காணக் கிடக்கும் சீர்திருத்தக் கருத்துகள், திருக்குறள் தெளிவுரை கண்ட காலத்தில் எழுந்ததில்லை; அழுத்தியுரைக்கப் பெறவும் இல்லை எனலாம். ஒருவர் தம் நூல் வரிசை ஆய்வும், அவர் தம் வரலாற்று ஆய்வுக்குச் சிறந்த இடமாய் அமையும் என ஒரு கருதுகோள் வகுத்துக் கொள்ள இஃது இடமாம்.

20. குறளோவியம்

சிலம்புக்குக் கற்கோட்டம் எடுத்தவர் செங்குட்டுவன். சொற்கோட்டம் எடுத்தவர் இளங்கோ!

வள்ளுவருக்குக் கற்கோட்டம் எடுத்தவர் கலைஞர்; சொற் கோட்டமும் எடுத்தவர் அவர்!

அக்கற்கோட்டத்தை ஒவ்வொரு சொற் கோட்டத்தின் நிறைவினும் கொண்டு இணையிலா இணையிலா இரு கோட்டக் கலை நயங்களையும் எடுத்துரைப்பது குறளோவியம்.

66

‘பதவுரை, விரிவுரை என்று எழுதிக் கொண்டிராமல் பலரும் விரும்பிப் படிக்கத் தக்க வண்ணம் அவர்களைக் கவர்ந்திழுத்துக் கருத்துகளை நெஞ்சத்தில் பதிய வைத்திட வேண்டும்" என்ற ஆசைத் துடிப்பில் எழுந்தது குறளோவியம். ஆசை வாளா ஒழியாமல் வான் சிறப்புக் கொள்வதை வளமாகக் காட்டுகிறது குறளோவியம்.

1956 இல் 'முரசொலி' முரசொலி' வார இதழில் தொடங்கிய குறளோவியம், பின்னர்த் ‘தினமணிகதிர்’ ‘குங்குமம்' ஆகிய இதழ்களில் தொடர்ந்து நடந்தது. தொடர்ந்து வரையப்பட்ட ஓவியங்கள் முந்நூறு; இடம் பெற்ற குறள்கள் 354. அவை அறத்தில் 76: பொருளில் 137 ; இன்பில் 141.

முதன் முதல் வரைப்பட்ட ஓவியம் :

'புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற் பின் சாக்கா(டு) இரந்துகோள் தக்க(து) உடைத்து'

99

(780)

என்பது. போருக்குச் சென்ற வீரன் பகைப் படையைப் பொடி செய்தான். மறைந்து வந்த அம்புக்கு இரையானான்! வெற்றி கண்ட படைத் தலைவன், வீரன் சாய்ந்து விட்ட கண்டு கண்ணீர்விட்டுக் கதறினான்

காட்சி (190-1).

காட்சியைக்

-

இது குறளோவியக்