உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - பொருள்

73

“களம்பட்டுத் தியாகியாக நான் மாண்டு கிடக்க என் உடல் மீது என் தலைவர் அண்ணா அவர்கள் கண்ணீர் சிந்தும் பேறுபெற வேண்டுமென்ற அவா மிகுதியால் எழுதப்பட்ட முதல் குறளோவியம் இது” என்பது தவிப்பு மிக்க முகப்புரை (4),

“நான் நினைத்தற்கு மாறாக நடந்து விட்டதே! என் அன்புத் தலைவர் எனக்கு முன் மறைந்து விட்டாரே' என்பது கற்பாறையாய் இருந்து, கற்பாரையும் நீராக்கும் நேயவுருக்கு! ருக்கப் பொருளாய் உருகுதல் காட்டும் உயிரோவியம்!

“நிகழ்ச்சிகளைக் காட்சியாக்கி, நிழல் தரும் குளிர் தருக்கள் அடர்ந்த நீரோடைத் தமிழிலும், நெஞ்சில் கனலேற்றும் முழவோசைத் தமிழிலும், நீள் விழியில் நதி தோன்றத் தூண்டும் உருக்க மிகு உணர்ச்சித் தமிழிலும்” குறட்பாக்களை உலவ விட்டதை எண்ண ஓவியமாக்கிக் காட்டும் கலைஞர், நாம் பாராட்ட விரும்பும் வண்ண ஓவியரையும் பாராட்டிச் சிறப் பிக்கிறார் (7). ஈரோவியங்களில் ஓரோவியத்தின் உரிமையாளர் அவரல்லரோ!

6

எவருக்குப் படைக்கிறார் குறளோவியத்தை? தமிழ் அறிஞர்கட்கு! ஏன்?

66

உரைநடையில் குறட்பாக்களை மலர் மாலையாக ஆக்கியோர் உளர்!

உளர்!

"செய்யுள் செய்து குறளுக்குப் பொருள் உரைத்தோர்

66

சுருக்கமாகச் சுவையாகக் குறளுக்குப் பொழிப்புரை புகன்றோர் உளர்!

66

இசைத் தமிழால் இனிய குறளைச் செவி வழி பாயச் செய்து சிந்தை குளிர்விப்போர் உளர்”

எனப் பட்டியலிட்டுக் காட்டும் கலைஞர், அவருள்ளும் தெளிந்து தெரிந்து “இன உணர்வுடன் இலக்கியப் பணியாற்றும் தன்மானத் தமிழ் அறிஞர்கட்கு”ப் படைக்கிறார்! தம் தேர்ச்சி அது!

குறளோவியம் வரைந்தவர் தேர்ச்சிப் படைப்பு ஈதென்றால் அக்குறளோவியம் வரைந்த கலைஞரைப் பற்றிய தேர்ச்சிப் படைப்பை மூதறிஞர் வ, சுப. மாணிக்கனார் மதிப்பு மிக்க மதிப்புரையிலே தவழ விடுகிறார்! திறனறிந்த தேர்ச்சியாம் அவர்தம் தெளிவுரை :