உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

இளங்குமரனார் தமிழ் வளம்

16

இந்நூலை எழுதியவர் தமிழ்ப்பற்று, தமிழறிவு, தமிழ் உணர்வு மிக்கவர். சங்க இலக்கியப் பயில்வினர். தமிழ் நாகரிகமே மனித நாகரிகம் என்ற கடைப்பிடியினர். புத்திலக்கியம் படைக்கும் கற்பனைக் கவிஞர். எழுத்திலும் சொல்லிலும் தொடை வளமிக்க உரைநடைக் கவிதையர். நாடகப் பார்வையர். உரை பல கற்றவர். நாட்டின் ஆட்சியில் உயர் பதவி தாங்கியவர். உலக அரசியல் கண்ணோட்டத்தர். பல்துறை மக்களொடு அணுகிப் பழகிக் காலவுலகியல் கைவரப் பெற்றவர். வாழ்வுப் பாசறையில் மலையும் கடலும் கண்டவர். தோலா நாவினர். தொய்யா நெஞ்சினர். சாதி சமயச் சழக்கிற் புகாப் பகுத்தறிவினர். சிந்தனைச் செயலினர். திருக்குறட் சிந்தையர். தமிழினத் தலைவர். எழுத்துக்கலை, செந்நாக் கலை, நாடகக்கலை, கவிதைக்கலை, அரசியற் கலை, எழிற்கலை என்றாங்குப் பல்வேறு கலைகளிலும் நெஞ்சு, அறிவு, செயல் தோய்ந்த கலைஞரே இவர் இவ் வனைத்தும் குறளோவியம் படைப்பில் இருந்து வடித்தெடுத்த வளச்சாற்றின் வளர் புகழ்க் கட்டிகள்!

-

குறளோவியம் தீட்டிய கலைஞர் “வள்ளுவர் தீட்டியுள்ள இந்த ஓவியங்களுக்கு நிகரான ஓவியம் உலகில் உண்டோ?” என்று வினா எழுப்பி இதற்குப் பதில் இல்லை! இ இல்லை! என்பதுதான் என விடையிறுக்கிறார் (73).

66

இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு தமிழகத்தில் தோன்றிய புரட்சிகரமான சிந்தனைக்குச் சொந்தக்காரன் பொதுவுடைமைக் கொள்கையின் வழிகாட்டி - வள்ளுவன் என நினைக்கும்போது நெஞ்சமெல்லாம் இனிக்கிறது” என்கிறார்.

(533).

66

இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு உலகப் பொது ஞாயிறு எனத்தக்க வகையில் ஒளியுமிழ்ந்து தோன்றியது திருக்குறள்” எனப் பூரிக்கிறார் (543). இத்தகைய நன் மதிப்பு வள்ளுவத்தின் மேலும், வள்ளுவர் மேலும் இல்லாக் கால் ஓவியம் தீட்ட முடியுமோ? ஒவ்வும் இயம், ஒவ்வியம்! அஃது ஓவியம்; ஓவியந் தீட்டியின் உளங்காட்டிகள் இவை: குறள் அழியா ஓவியம் என்பதைப் பல்கால் பகர்வார் (256) (260). மேலும்!

தொலைவில் இருந்து பார்க்க நீண்டுயர்ந்து விளங்கும் பச்சை இலிங்கமெனக் காட்சியளிப்பது நெட்டிலிங்கம். அதன் தழைகளைத் தோரணத்திற்காக வெட்டி வந்ததும் கட்டி மகிழ்ந் ததுமாகிய நிகழ்ச்சிகளை நினையுமுகத்தான் “நுனிக்கொம்பர்