உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - பொருள்

75

ஏறினார்”; குறளுக்கு விளக்கம் தருகிறார். அஃது இளமைத் தொண்டின் இனிய செய்தி! (251).

1982 ஆம் ஆண்டு பெப்ருவரி 18 - இல் மதுரை திருச் செந்தூர் ‘நெடும்பயணம்' கொண்ட பேரணிச் செய்தி இரண்டு குறள்களுக்கு விளக்கமாகத் திகழ்கின்றது (284-285).

66

என்னைப் போலவே அவர் வாழ்விலும் துன்பங்கள் தொடர் கதையாக இருந்திருக்கின்றன” என்னும் முகப்பொடு தம் தந்தையார் முத்துவேலரை நினைவு கூறும் செய்தி நெஞ்சை நீராக்குகிறது. நச்சுப் பாம்பு, முத்துவேலர் தோளில் வீழ்ந்த போது ஆடாது அசையாது இருந்து அதன் போக்கில் போக விட்ட திண்மையை நினைக்கும் போது குடும்பக் கொடை வளம் கலைஞர்க்கு உண்மை தெளிவாகின்றது (164-165). நம்பிக்கைக் கேடரும் நட்டாற்றில் கைவிடுவாரும் எத்தகு துயர்களை விளைத்தனர் என்பது குறளோவியத்தின் பல உள்ளுறையாகத் துலங்குதல் அரசியல் உலகத் திருவிளையாடலை விளக்குவன.

ங்களில்

தமிழ் வீரம் பளிச்சிடுதல் (460), மாமல்லை சிற்ப மாண்பு (620), சோழர் குடவோலை முறை (627), ஊழிக் கேடு (484) என்பவை என்ன, மனோன்மணியக் காட்சி (328) உதயணன் செய்தி (338), கண்ணகி மாண்பு (344), கோவலன் செய்தி (208), கனக விசயர் சான்று (480), குமணன் கொடை (198), அதியன் ஔவைக்கு வழங்கிய நெல்லிக்கனி (522), புகழேந்தியார் கூத்தர் வரலாறுகள் (396) என்ன, கலைவாணர் குறிப்பு (355) அண்ணா மலையார் (386), பாவேந்தர் பாநயம் (524), 606) என்பவை என்ன, மருதுபாண்டியர் உரிமைப்போர் (572), தந்தை பெரியார், மூதறிஞர் இராசாசி - உயிர் நட்பு (362) என்ன, இவையெல்லாம் குறளோவியத்தில் மின்னலிடுகின்றன.

தொழுத கையுள் படையொடுங்குதற்குக் காந்தியடிகளும் (102), பகல் வெல்லும் கூகையைக் காக்கை இகல் வெல்லுதற்கு, இட்லரின் படையை வென்ற சோவியத்துப் படையும் (114), காலாழ் களரின் நரி அடுதலுக்கு மராட்டிய மன்னன் சிவாசியும், உலக வரலாறு படைத்த சீசரும், அந்தோணியும் (136), பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைதலுக்குச் சாக்கிரடீசும் (146), ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை விளைவுக்குப் பூட்டோவைச் சியா படுத்திய பாடும் (218), அலைமேற் கொண்டு அல்லவை செய்தான் அடையும் கேட்டுக்கு, இடி அமீனும் (334),