உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

இளங்குமரனார் தமிழ் வளம் – 16

நிறைமொழி மாந்தர் பெருமைக்கு அண்ணல் காந்தி, அருமை நேரு, மூதறிஞர் இராசாசி, பெருந்தலைவர் காமராசர், தந்தை பெரியார், பசும்பொன் முத்துராமலிங்கர், சட்ட வல்லார் அம்பேத்கார், சால்பர் காயிதே மில்லத்து, பேரறிஞர் அண்ணா நினைவு நிலையங்களும் (349,359) மனைத்தக்க மாண்புடைமைக்குக் காரல் மாக்கசின் ஒப்பிலாத் துணையாம் சென்னி மாக்கசும் (370) நெடும்புலனுள் வெல்லும் முதலை அடும்புனலின் நீங்கின் அதனைப்பிற” என்பதற்குக் குருசேவும் தாலினும் (388) “கூற்றங் குதித்தலும் கை கூடுதற்குக் காந்திய வழித் தோன்றல் விநோபாபாவேயும் (491),

66

தற்காத்துத் தற்கொண்டான் பேணுதலுக்குச் செயப் பிரகாசரின் திருத்துணை பிரபாவதியாரும் (554) எடுத்துக் காட்டாகி இலங்குதல் வள்ளுவம் வையக வாழ்வியல் நூல் என்பதை வழிவழிக் காட்டுவதாம்.

மேதக்கோர் மட்டுமோ குறள்வாழ்வுச்சான்றர்? சிறை வாழ்வுக் குற்றவாளி (314), பல்லக்குத் தூக்கிப் பதை பதைப்போன் (352), குப்பை கூட்டிப் பிழைப்போர் (392), வீர மைந்தனைப் பெற்ற அன்னை (405), வண்டியோட்டியின் தாய் (427) இன்னோர் வாயில் இருந்தும் குறள் மணிகள் கொஞ்சி வருகின்றன. அம்மட்டோ?

கரடியும் குறள் கூறுகின்றது (240), காளையும் குறள் மொழிகின்றது (385) கனவிலும் குறள் வழிகின்றது (395).

காட்சி விளக்கங்கள் எத்தனை? கருத்து விளக்கங்கள் எத்தனை? சொல் விளக்கங்கள் எத்தனை? கதை விளக்கங்கள் எத்தனை? நகைச்சுவைச் செய்தியும்தான் இல்லாமல் போயதா? (298, 431, 503, 592). பெயரிலே கூட நகைச் சுவை! குறள் நயம் விளக்கும் பெயர் நகைச்சுவை (எ-டு) நெளிந்தான், வளைந்தான் (125) நரித்தலையன் (311), கம்பர் தலையில் கட்டப்பட்ட “கன்னா, பின்னா, மன்னா, தென்னா”வும் தலை நீட்டுகிறது (503). கசேந்திர மோட்சம் (135), சீதேவி மூதேவி (216), இந்திரன் அகலிகை (463) ன்ன தொன்மங்கள் தம்முருவும் மாற்றுருவும் பெறப்படுகின்றன.

பேருந்துகளிலெல்லாம் குறள் பதித்த செயன்மையரின், குறளோவியத்தின் ஒரு காட்சி, ஓரிளைஞன் திருமடச் சுவரொன்றில் திருக்குறள் பதித்தலைக் குறிக்கிறது. திருத்தம் வேண்டுமிடத்துத் திருத்தம் அது (336).