உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - பொருள்

77

"உன் திருத்தக் குறளை விட்டு விட்டுத் திருக்குறளைப் பாடு” என்கிறது ஒரு கட்டளையுள்ளம்

(268).

குறும்பு வழியில் குறள் பொருள் காண்பாரைத் திருத்துகிறது ஒரு குறள் ஓவியம் (592). குறளுக்கு நகைப் பொருள் தந்து மகிழ்வாரை நகைத்து ஒதுக்கும் ஓவியம் அது.

அடுங்காலைக்குச் சாம்போது என்பதும் (195), தூங்குதற்கு உறக்கம் வருவதும் (586), திருத்தம் பெறத் தக்கவை. இந்திரன் அகலிகைக் காட்சி பழையவுரை வழியது. ஐந்தவித்து, ஆற்றலால் சிறந்தவன் இந்திரன்! தொன்மக் கதை வழுக்கை, இழுக்காக்கல் இந்திரப் பேறாகாது?

மனைவி யாழிசைக்க, கணவன் குழலிசைக்க... மக்கள் மழலை கேட்ட பின்னே "இந்த மழலைக்குப் பின்னர்தான் குழலும் யாழும்" என்பதும் (15), யாழ் போல் ஒரு பெண் பிள்ளையும், குழல் போல் ஓராண் பிள்ளையுமாக இரண்டு பிள்ளைகள் போதுமென வள்ளுவர் வாய்மொழி காட்டுவதாகக் கூறுவதும் (542) வளமான படைப்புகள்.

ஒன்றை விளக்க ஒரு காட்சியா? இரு காட்சியா? முக் காட்சியும் உண்டு! (436, 282).

66

"தேனடை போலத் தொங்கும் தாடி

(142)

"பனி விழுந்து பதத்துப் போய் விட்டதால் உடனே எரியாத ஈர விறகைப் போன்றவர்" (142).

“பித்த வெடி கொண்டுள்ள பாதம் போன்று வயலெங்கும் வெடிப்புகள்” (227).

66

"இலவம் பஞ்சின் உருண்டைகள் போல் முயல்கள் தரையின் பறந்திடும் காட்சி" (331).

"வேகமாக விழும் அந்த (அருவி) நீரினிடையே கண்ணாடிப் பேழைக்குள் தெரியும் கயல் மீன்களைப் போல் அவர்கள் தோற்றமளித்தனர்” (351).

போல

'பெற்றோர்க்கு அடங்காத பிள்ளைகளைப் அவர்களின் விழிகள் மட்டுமல்ல, நெஞ்சங்களும் அவர்களின் கட்டுப்பாட்டை மீறி ஒன்றையொன்று நெருங்கிக்கொண்டிருந்தன

(391).

"தோல் சுருங்கிய மாம்பழம் போல அந்தக் கிழவர் ஊர்க் கோடியில் உள்ள மேடையில் உட்கார்ந்திருந்தார்” (560).