உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

1. நரகத்து.

இளங்குமரனார் தமிழ் வளம் 17

பழிவழிப் பக்கமும் பாரான் அருளோன்

248. பொருளுடையான் கண்ணதே போகம் அறனும் அருளுடையான் கண்ணதே யாகும் - அருளுடையான் செய்யான் பழிபாவஞ் சேரான் புறமொழியும் உய்யான் பிறர்செவிக் குய்த்து.

-சிறுபஞ்சமூலம் 3

பொறுத்தலும் பரிதலும் போற்றுவர் அருளோர்

249. தம்மை யிகழ்ந்தமை தாம்பொறுப்ப தன்றிமற் றெம்மை யிகழ்ந்த வினைப்பயத்தால் - உம்மை எரிவாய் 'நிரயத்து வீழ்வர்கொ லென்று பரிவதூஉஞ் சான்றோர் கடன்.

-நாலடியார் 58

விதைத்தது தானே விளைந்திடக் காண்போம் 250. வைததனா லாகும் ’வசைவணக்கம் நன்றாகச் செய்ததனா லாகுஞ் 3செழுங்குலமுற் - செய்த பொருளினா லாகுமாம் போகம் நெகிழ்ந்த அருளினா லாகும் அறம்.

-நான்மணிக்கடிகை 101

அருட்கண் நிற்ப தறிவென ஓர்க

251. தன்னொக்குந் தெய்வம் பிறிதில்லை தான்றன்னைப் பின்னை மனமறப் பெற்றானேல் - என்னை

4

5

இருட்கண்ணே நோக்கா திருமையும் பெற்றாங் கருட்கண்ணே நிற்ப தறிவு.

அறநெறிச்சாரம் 145

அருள்விளக் கேற்றின் அம்மைக் கிருளிலை

252. மெய்தகளி யாகப் பொறையாந் திரிக்கொளீஇ நெய்தவ மாக நிறைதரப் - பெய்தாங்

2. வசையே வணக்கமது

4. எழுத்தெண்ணே நோக்கி யிருமையும்.

3. செழுங்கிளை.