உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

கருளாம் விளக்கேற்றி யம்மைப்பாற் செல்ல இருள்போய் வெளியாய் விடும்.

கறவைபோற் கறக்கக் கதுவிய தருளே

129

-பாரதம்

253. அறவிய மனத்த ராகி யாருயிர்க் கருளைச் செய்யிற் பறவையும் நிழலும் போலப் பழவினை யுயிரோ டொட்டா. மறவியொன் றானு மின்றி மனத்ததே சுரக்கு 'நல்லான் கறவையிற் கறக்குந் தம்மாற் காமுறப் பட்ட வெல்லாம்.

தன்னுயிர் என்ன மன்னுயிர் ஓம்புக

254. தன்னுயிர் தான்பரிந் தோம்பு மாறுபோல் மன்னுயிர் வைகலு மோம்பி வாழுமேல் இன்னுயிர்க் கிறைவனா யின்ப மூர்த்தியாய்ப் பொன்னுயி ராய்ப்பிறந் துய்ந்து போகுமே.

3

-

சீவகசிந்தாமணி 2877, 3107

ஆருயிர்க் கெல்லாம் ஒருயிர் ஆகுக

255. ஆருயிர் 'யாதொன் றிடருறு மாங்கதற் கோருயிர் போல வுருகி 'யுயக்கொண்மின் நேரி னதுமுடி யாதெனி னெஞ்சகத் தீர முடைமை யருளி னியல்வே.

ஆருயிர் கட்கெலாம் பேரருள் புரிக

256. ஆற்று மின்னரு ளாருயிர் மாட்டெலாந் தூற்று மின்னறந் தோம்நனி துன்னன்மின் மாற்று மின்கழி மாயமு மானமும்

போற்று மின்பொரு ளாவிவை கொண்டுநீர்.

2. தன்னாற்.

-சூளாமணி 2010

1. கண்டாங்.

3. துயர்ந்து.

4. ஆங்கொன்றிடருறி லாங்கதற்

5. யுயக்கொள்ள.