உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

இளங்குமரனார் தமிழ் வளம் 17

அருள்பொருள் ஆயின் இருளியல் பின்றே

257. பொருளைப் பொருளாப் பொதிந்தோம்பல் செல்லா தருளைப் பொருளா வறஞ்செய்தல் வேண்டும் அருளைப் பொருளா வறஞ்செய்து வான்கண் இருளிலியல் பெய்தாத தென்னோ நமரங்காள்.

28. புலால் மறுத்தல்

-வளையாபதி 19, 20

(“ஊன் உண்டலை ஒழிதல்” - பரிமே.

இ.பெ.அ: திருக். 26. ப.பா.தி. 33.)

கொல்லா இல்லறம் நல்லியற் றவமாம்

258. கென்றூ னுகருங் கொடுமையை புண்ணினைந் தன்றே யொழிய விடுவானேல் - என்றும்

இடுக்க ணெனவுண்டோ இல்வாழ்க்கை யுள்ளே 'படுத்தானாந் தன்னைத் தவம்.

அறநெறிச்சாரம் 101

ஊனுண வுவப்பார்க் கேனைய வுதவா

259. விடலரிய துப்புடைய வேட்கையை நீக்கிப் படர்வரிய நன்னெறிக்க ணின்றார் - இடருடைத்தாப் பெற்ற விடக்கு நுகர்தல் கடனீந்திக்

கற்றடியு ளாழ்ந்து விடல்.

ஊனுணாச் சார்பே உம்பருள் உய்க்கும்

பழமொழி 342

260. கரப்பவர்க்குச் செல்சார் கவிழ்தலெஞ் ஞான்றும் இரப்பவர்க்குச் செல்சார்வொன் றீவோர் - பரப்பமைந்த தானைக்குச் செல்சார் தறுகண்மை யூனுண்டல் செய்யாமை செல்சார் வுயிர்க்கு.

-நான்மணிக்கடிகை 38

1. மடுத்தானாந்.