உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

உடற்புதை கூடாம் ஊனுண் வயிறு

261. துக்கத்துட் டூங்கித் துறவின்கட் சேர்கலா மக்கட் பிணத்த சுடுகாடு தொக்க

விலங்கிற்கும் புள்ளிற்குங் காடே புலன்கெட்ட புல்லறி வாளர் வயிறு.

கால்முரித் துண்டதால் மேல்வரு பழவினை 262. அக்கேபோ லங்கை யொழிய விரலழுகித் துக்கத் தொழுநோ யெழுபவே அக்கால் அலவனைக் காதலித்துக் கால்முரித்துத் தின்ற பழவினை வந்தடைந்தக் கால்.

131

-நாலடியார் 121, 123

ஊன்சுவை விழைந்தார்க் குது வது’ என்னே!

263. வாயிற் சுவைவெஃகி மான்கொன்று மீன்கொன்று நாயொத் துழல்வார்க்கு நாவளவே - போயிழிந்தால் இன்னா தினிதென் றறியா ரிதற்காக மன்னாவூன் தின்றல் விடு.

கோறலும் விற்றலும் கொடுமையில் ஒப்பதே 264. தகாதுயிர்கொல் வானின் மிகாமையிலை பாவம் அவாவிலையி லுண்பான் புலால்பெருகல் வேண்டும் புகாவலைவி லங்காய்ப் பொறாதுபிற வூன்கொன் றவாவிலையில் விற்பானு மாண்டருகல் வேண்டும்.

சுற்றந் தின்பவர் மற்றூன் உண்பவர்

265. பிறவிக் கடலகத் தாராய்ந் துணரின் தெறுவதிற் குற்ற மிலார்களு மில்லை அறவகை யோரா விடக்கு மிசைவோர் குறைவின்றித் தஞ்சுற்றந் தின்றன ராவர்.

-பாரதம்